News

Monday, 09 November 2020 08:31 PM , by: KJ Staff

Credit : The Economic Times

விவசாயிகள் மாற்று பயிர்கள் சாகுபடியில் ஆர்வம் காட்டுவதால், தமிழகத்தில் பருத்தி சாகுபடி (Cotton cultivation) பரப்பு கணிசமாக குறைந்துள்ளது.

பருத்தி சாகுபடிக்கு 11 கோடி ரூபாய் ஒதுக்கீடு:

பெரம்பலுார், விருதுநகர், சேலம், திருச்சி, தர்மபுரி, மதுரை, கடலுார், அரியலுார், விழுப்புரம், துாத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில், பருத்தி சாகுபடி அதிகளவில் நடந்து வருகிறது. பருத்தி சாகுபடியை அதிகரிக்க, வேளாண் துறை வாயிலாக, பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.இதற்காக, பருத்தி சாகுபடி இயக்கத்திற்கு, 11 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிதியில், விவசாயிகளுக்கு மானிய உதவிகள் (Subsidy) வழங்கப்பட்டு வருகின்றன.

மாற்றுப் பயிர் சாகுபடி:

சில பருவங்களாக, பருத்திக்கு உரிய விலை (Appropriate price) கிடைக்கவில்லை. எனவே, நெல், சிறுதானியங்கள், எண்ணெய் வித்துக்கள் (Oil seeds) உள்ளிட்ட மாற்று பயிர் சாகுபடியில், விவசாயிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால், பருத்தி சாகுபடி பரப்பு கணிசமாக குறைந்து வருகிறது. நடப்பாண்டில், 5.18 லட்சம் ஏக்கரில், பருத்தி சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆனால், 1.90 லட்சம் ஏக்கரில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. கடந்தாண்டு, இதே காலக்கட்டத்தில், 3.05 லட்சம் ஏக்கரில் சாகுபடி நடந்தது. சாகுபடி பரப்பு கணிசமாக குறைந்துள்ளதால், வேளாண் துறையினர் (Department of Agriculture) அதிர்ச்சி அடைந்துள்ளனர். பருத்தி சாகுபடியை அதிகரிக்க, தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி, மாவட்ட வேளாண் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

வெங்காயம், உருளைக்கிழங்கைத் தொடர்ந்து சமையல் எண்ணெயின் விலை உயர்வு!

நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலம்: தமிழகத்திற்கு முதலிடம்

தரமற்ற எண்ணெய் அதிகளவில் விற்பனை! ஆய்வில் கண்டுபிடிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)