1. செய்திகள்

தரமற்ற எண்ணெய் அதிகளவில் விற்பனை! ஆய்வில் கண்டுபிடிப்பு!

KJ Staff
KJ Staff

Credit : Dinamalar

நகர் மற்றும் புறநகரில் விற்கப்படும் எண்ணெய் தரத்தை (Oil Quality) ஆய்வு செய்ய 7 மாதங்களாக உணவு பாதுகாப்பு துறை (Department of Food Safety) அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

தரமற்ற எண்ணெய்:

கடலை எண்ணெய், நல்லெண்ணெய் மாதிரிகளை (Samples) சேகரித்தனர். 237 மாதிரிகளை ஆய்விற்காக சென்னை கிண்டி அரசு உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பினர். முடிவில் 54 மாதிரிகள் பாதுகாப்பற்றவை (Insecure) என தெரிய வந்துள்ளது. மேலும் 96 மாதிரிகள் கலப்பட, தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டுள்ளன. இதர பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய சில வகை எண்ணெய்யை சமையல் எண்ணெய்யாக மாற்றி விற்றதும் அடங்கும். மொத்த மாதிரிகளில் 63 சதவீதம் பாதுகாப்பற்ற எண்ணெய் என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.

தரமற்ற எண்ணெயால் தீங்கு:

உணவு பாதுகாப்பு அலுவலர் சோமசுந்தரம் (Somasundaram) கூறுகையில், ''சில்லறை விலையில் விற்கப்படும் எண்ணெய்யை தான் 90 சதவீதம் சேகரித்தோம். இவற்றில் பெரும்பாலும் கலப்படம் அல்லது தரமற்ற எண்ணெய் என்பது ஆய்வில் தெரிந்துள்ளது. லாபத்திற்காக தரமற்ற எண்ணெய் விற்கின்றனர். இவற்றை பயன்படுத்துவது மக்களுக்கு பல்வேறு தீங்குகளை ஏற்படுத்தும்,'' என்றார். நவம்பர் 7, இன்று மதுரையில் தரமற்ற எண்ணெய் தாராளமாக விற்பனையாவது அதிகாரிகள் ஆய்வில் தெரிய வந்தது. அதிகாரிகள் சேகரித்த 237 மாதிரிகளில் 150 தரமற்றவை என கண்டுபிடிக்கப்பட்டது. பொதுமக்கள் இனி விழிப்புடன் இருக்க வேண்டிய நேரமிது.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

தேவையற்ற சமையல் எண்ணெயை எரிபொருளாக்கலாம்!

இலைவழி உரமாக துத்தநாகம் சல்பேட்!

English Summary: Substandard oil is selling like hot cakes! Discovery in the study!

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.