News

Sunday, 27 September 2020 01:52 PM , by: KJ Staff

குஜராத் மாநிலத்தில் பிரசித்திப் பெற்று, அதிகளவில் பயிரிடப்படும் பழம் தான் டிராகன் (Dragon Fruit). இந்தப் பழங்கள் குறைந்த முதலீட்டில், அதிக இலாபத்தை அள்ளித் தரும். அறுவடைக் காலம் கனிந்ததும், 10 நாட்களுக்கு ஒருமுறை அறுவடை செய்து விற்கலாம். ஒரு கிலோ ரூ. 250 வரை விற்கப்படுகிறது. இந்த டிராகன் பழம் தற்போது, தமிழகத்தின் கோவை மாவட்டத்திலும், சாகுபடியாகி அறுவடை செய்யப்படுகிறது.

டிராகன் பழத்தின் குறிப்புகள்:

தமிழகத்தில் அதிகம் அறியப்படாத டிராகன் பழம், சப்பாத்திக்கள்ளி (Sabbath cactus) குடும்பத்தைச் சேர்ந்தது. இந்தப் பழங்கள், மிகுந்த மருத்துவ குணம் கொண்டது. டிராகன் பழ சாகுபடியில், இந்தியாவின் குஜராத், அசாம் மற்றும் ஆந்திரா மாநிலங்கள் முன்னணியில் உள்ளன. குறிப்பாக, குஜராத் மாநிலத்தில், ஏராளமான விவசாயிகள் டிராகன் பழங்களை, அதிக பரப்பளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.

டிராகன் பழ சாகுபடிக்கு ஏற்ற பகுதி:

மிதவெப்பம் (Temperature) கொண்ட பகுதிகள், டிராகன் பழ சாகுபடிக்கு ஏற்ற நிலப்பகுதி ஆகும். தமிழகத்தின் கோவையில், டிராகன் பழத்திற்கு ஏற்ற சீதோஷ்ண நிலை உள்ளதால், ஆந்திரா மாநிலத்திலிருந்து, ஒரு நாற்று ரூ. 20-க்கு கொள்முதல் (Purchase) செய்யப்படுகிறது.

கோவையில் டிராகன் பழம்:

தமிழகத்தின் கோவை மாவட்டத்தில், பேரூர் பச்சப்பாளைத்தைச் சேர்ந்த விவசாயி கோவிந்தராஜன் (Govindarajan), டிராகன் பழங்களைப் பயிரிட்டு, அறுவடை செய்து அசத்தி வருகிறார். குறைந்த முதலீட்டில், நல்ல இலாபம் (Profit) பெறுகிறார்.

 

முதலீடும், இலாபமும்:

முதல்முறை டிராகன் பழ சாகுபடிக்கு, கல் தூண்கள் மற்றும் இரும்புக் கம்பிகள் அமைக்க ஒரு ஏக்கருக்கு ரூ. 2 இலட்சம் செலவிட வேண்டி இருக்கும். பயிரிட்ட பின்பு, அடுத்தடுத்த ஆண்டுகளில் செலவு குறைந்து விடும். இப்பழத்திற்கு, தண்ணீர்த் தேவையும், மருந்து செலவும் மிக மிகக் குறைவு. பயிரிட்டு டிராகன் செடி வளர்ந்து, அறுவடைக்குத் தயாரானதும், ஜூலை முதல் டிசம்பர் வரை பழங்கள் கிடைக்கும். பழங்களை எறும்புகள் தாக்குமால் இருக்க, ஊடுபயிராக (Intercropping) செண்டுமல்லியைப் பயிரிடலாம். ஊடுபயிரைப் பயன்படுத்துவதால், பழங்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க முடியும். இதனால், அதிக அளவில் சாகுபடியும் செய்யலாம். அறுவடைக் காலத்தில், பத்து நாட்களுக்கு ஒருமுறை, சுமார் 200 கிலோ அளவு பழங்களை சாகுபடி செய்து விற்கலாம். ஒரு பழத்தின் எடை ஏறக்குறைய 400 கிராம் அளவு இருக்கும். பழத்தின் விலையும், ஒரு கிலோவிற்கு ரூ. 250 வரை விற்கப்படுவதால், நல்ல இலாபம் கிடைக்கும். விவசாயத்தில் புது முயற்சி செய்ய விரும்புபவர்களுக்கு, டிராகன் பழம் சிறந்தத் தீர்வாக அமையும்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க...

வாங்க விவசாயிகளே! நாவல் பழ சாகுபடித் தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வோம்!

பப்பாளி விவசாயத்தில் உச்சம் தொட்ட இயற்கை விவசாயி உமாபதி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)