News

Saturday, 25 July 2020 09:42 AM , by: Daisy Rose Mary

கொரோனா தொற்று காலத்தின் போது வேளாண் துறை மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் குறுவை பயிர்களுக்கான விதைப்பு பரப்பளவு கடந்த ஆண்டை காட்டிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகள் மற்றும் விவசாய நடவடிக்கைகளைக் கள அளவில் எளிதாக்க இந்திய அரசின் வேளாண்மை, ஒத்துழைப்பு மற்றும் விவசாய நலத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் பயனாக குறுவைப்பயிர்கள் விதைப்பின் நிலப்பரப்பைப் பொறுத்தவரை திருப்திகரமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது

குறுவைப் பயிர்கள் (Kharif Crops) விதைப்பு பரப்பளவு விபரம்

அரிசி - Rice

இந்த ஆண்டு அரிசி சுமார் 220.24 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில். 187.70 லட்சம் ஹெக்டேர் மட்டுமே பயிரிடப்பட்டது.

பருப்பு வகைகள் - Pulses

பருப்பு வகைகள் சுமார் 99.71 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் போது இதே காலகட்டத்தில் 79.30 லட்சம் ஹெக்டேர் மட்டுமே பயிரிடப்பட்டது.

புஞ்சை தானியங்கள் - Coarse Cereals

புஞ்சை தானியங்கள் சுமார் 137.13 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் இந்த ஆண்டு பயிரிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில்.120.30 லட்சம் ஹெக்டேரில் மட்டுமே பயிரிடப்பட்டது..

எண்ணெய் வித்துக்கள் - oil seeds 

எண்ணெய் வித்துக்கள் இந்த ஆண்டு சுமார் 166.36 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் எண்ணெய் வித்துகள் பயிரிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 133.56 லட்சம் ஹெக்டேரில் மட்டுமே பயிரிடப்பட்டது.

கரும்பு - sugarcane

கரும்பின் குறுவை சாகுபடி இந்த ஆண்டு சுமார் 51.54 லட்சம் ஹெக்டேர் பயிரிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 51.02 லட்சம் ஹெக்டேரில் மட்டுமே பயிரிடப்பட்டது.

சணல் மற்றும் புளிச்ச கீரை - Jute & Mesta

சணல் மற்றும் புளிச்ச கீரை 6.94 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் இது கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் 6.84 லட்சம் ஹெக்டேரில் மட்டுமே பயிரிடப்பட்டது.

பருத்தி - Cotton

இதேபோல் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில். 96.35 லட்சம் ஹெக்டேரில் மட்டுமே பயிரிடப்பட்ட பருத்தி தற்போது சுமார் 118.03 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது.

இதே போல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 123 நீர்த்தேக்கங்களில் நேரடி நீர் சேமிப்பு கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியை விட 155 சதவீதம் அதிகம் என்று மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது

மேலும் படிக்க ... 

நோய்களை தீர்க்கும் வேப்பிலையின் மருத்துவ பயன்கள்!

தேனி வளர்ப்பு, காளான் வளர்ப்பு, மலர் தோட்டம் உள்ளிட்ட பல சிறு தொழில்கள் குறித்து படிக்க..

பெண்களே தொழில் தொடங்க விருப்பமா? - ரூ.2 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை அள்ளித்தரும் அற்புதமான ஐந்து திட்டங்கள்!

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)