News

Wednesday, 17 November 2021 11:07 AM , by: Elavarse Sivakumar

ஆஸ்திரியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா அச்சம் காரணமாக, எதிர்வரும் 3 வாரங்களுக்‍கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

விஸ்வரூபம் (Viswaroopam)

கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை உலுக்கி எடுத்த கொரோனா வைரஸ் தொற்றுப் பரவில், தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதனால் பல்வேறு நாடுகள் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு வருகிறது. 

6ம் தேதி வரை ஊரடங்கு (6ம் தேதி வரை ஊரடங்கு)

கொரோனாத் தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக, மத்திய ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில், இரவு நேர ஊரடங்கு மற்றும் பகுதிநேர பணி நிறுத்தம் அமலில் உள்ளது.

அதன்படி, இரவு 8 மணி முதல் அதிகாலை 6 மணி வரை தேனீர் கடை, மதுபான விடுதிகள், உணவகங்கள் உள்ளிட்வை சில நிபந்தனைகளுடன் திறக்கப்பட்டுள்ளன. எனினும், திரையரங்குகள் மற்றும் அருங்காட்சியகங்களைத் திறக்‍க அனுமதி இல்லை.

இந்நிலையில், கொரோனாவின் அடுத்த அலை அச்சம் காரணமாக, அடுத்த மாதம் 6-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அந்நாட்டு அரசு பிறப்பித்துள்ளது.

சீனா (China)

கொரோனா தொற்று முதன் முதலில் சீனாவில் தான் ஏற்பட்டது. பின்னர் உலகின் மற்ற நாடுகளுக்கும் பரவத் தொடங்கியது. அதன்பிறகு பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் உச்ச நிலையில் இருந்தாலும் சீனாவில் கட்டுக்குள்ளேயே இருந்தது.

இந்தநிலையில் சீனாவின் டலியான் நகரில் உள்ள ஷுவாங்கே பல்கலைக்கழக நகரில் ஏராளமானவர்களுக்கு தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்துதல் (Isolation)

இதையடுத்து அந்த பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்த கடந்த அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து சுமார் 1500 மாணவர்கள் அவர்கள் தங்கியிருந்த விடுதிகளிலும், ஓட்டல்களிலும் அடைத்து வைக்கப்பட்டனர். அவர்களுக்கு காணொலி காட்சி மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அவர்களுக்கான உணவுகள் அவர்களின் இருப்பிடத்திற்கே அனுப்பப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க...

லட்சங்களை அள்ள சிறந்த வாய்ப்பு - உங்களிடம் 786 தொடரின் ரூபாய் நோட்டு இருந்தால்!

இன்றும் நாளையும் மிக கன மழை எச்சரிக்கை- சென்னைக்கு ரெட் அலர்ட்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)