News

Wednesday, 25 August 2021 06:28 PM , by: T. Vigneshwaran

Lockdown In Tamil Nadu

கொரோனா அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கேரள மாநிலத்தில் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகமாக உள்ளது. நாட்டின் மற்ற மாநிலங்கள் அனைத்திலும் வைரஸ் பாதிப்பு பெரிதும் குறைந்துள்ள சூழலில், கேரளாவில் மட்டும் அதிகரித்துக் கொண்டே இருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த சீராய்வு கூட்டத்தில், தற்போதைய கொரோனா கண்டிப்புகள் அப்படியே தொடரும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கை மீண்டும் அமல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கேரள அரசு தீவிரம்(Government of Kerala Intensity)

மூன்றாவது அலை விரைவில் தொடங்கவுள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கும் நிலையில், வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த கேரள அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதுதொடர்பாக பேசிய முதல்வர் பினராயி விஜயன்பல மாவட்டங்களில் தடுப்பூசி முகாம்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன என்று கூறியுள்ளார்.

பரிசோதனைகள் அதிகரிப்பு(An increase in experiments)

மாவட்டங்களில் அறிகுறிகள் தென்படும் நபர்களுக்கு மட்டுமே பரிசோதனை நடத்தப்படுகிறது. அதேசமயம் மாநிலம் முழுவதும் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 2 லட்சம் என்ற அளவிற்கு அதிகரித்துள்ளாக தெரிவித்தார். தற்போது 1.3 லட்சம் என்ற அளவில் தினசரி பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

தடுப்பூசி போடும் பணிகள் தீவிரம்(Intensity of vaccination tasks)

18 வயதுக்கு மேற்பட்ட 70 சதவீத பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ள மாவட்டங்களில், அடுத்த இரண்டு வாரங்களில் மீதமுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். முன்னதாக சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தலைமையில் உயர்மட்ட அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது.

அதில், மூன்றாவது அலை வருவதற்கு வாய்ப்புள்ளதால் தடுப்பூசி போடும் எண்ணிக்கையை அதிகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தடுப்பூசி முகாம்களை தீவிரப்படுத்த சிறப்பான நடவடிக்கை எடுக்கப்படும். விடுமுறை நாட்களில் தடுப்பூசி போடப்படும் எண்ணிக்கை குறைவாக இருக்கும் நிலையில் வரும் நாட்களில் அதிகரிக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க:

விவசாயிகளுக்கு நற்செய்தி! தமிழக அரசின் பயிர்கடன் அறிவிப்பு!

குவிண்டாலுக்கு ரூ. 290 ஆக கரும்பு விலை! அமைச்சரவை ஒப்புதல் !

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)