1. செய்திகள்

விவசாயிகளுக்கு நற்செய்தி! தமிழக அரசின் பயிர்கடன் அறிவிப்பு!

T. Vigneshwaran
T. Vigneshwaran
Tamil Nadu Government Announces Crop Loan

நடப்பு நிதியாண்டியில் ஜூலை 31ம் தேதி வரை 98 ஆயிரத்து 36 விவசாயிகளுக்கு தமிழக அரசு 763 ரூபாய் கோடி பயிர்க்கடன் வழங்கியுள்ளது.

2021-22ம் ஆண்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம்  ரூ.11,500 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கொள்கை விளக்க குறிப்பில் அறிவிக்கப்பட்டது.

தமிழக சட்டப்பரேவையில் இன்று கூட்டுறவு, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது விவசாயிகளுக்கான பயிர்கடன் குறித்த கொள்கை விளக்கப்பட்டது.

அதில், கூட்டுறவு சங்கங்கள், உழவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிர் கடன் அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2020-21ம் நிதியாண்டில் 12 லட்சத்து, 37 ஆயிரத்து 448 விவசாயிகளுக்கு 9 ஆயிரத்து 504 கோடி பயிர்கடன் இப்போது வரை வழக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 330 பட்டியலின் பழங்குடியின விவசாயிகளுக்கு 755 கோடி ரூபாய் சேர்ந்துள்ளது.

அதுபோல், நடப்பு நிதியாண்டியில் ஜூலை 31ம் தேதி வரை 98 ஆயிரத்து 36 விவசாயிகளுக்கு 763 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்கியதோடு, இதில், 7,823 பட்டியலின பழங்குடியின விவசாயிகளுக்கு, ரூபாய் 53.30 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2021-22 ஆம் ஆண்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ரூபாய் 11,500 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை கொள்கை விளக்க குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:

கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் வழங்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்!

SBI வங்கியில் விவசாய கடன் வட்டி விகிதம் எவ்வளவு?

English Summary: Good news for farmers! Tamil Nadu government announces crop loan Published on: 25 August 2021, 04:06 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.