தமிழகத்தில் அமலில் உள்ளக் கொரோனா ஊரடங்குக் கட்டுப்பாட்டு நெறிமுறைகளை வரும் ஜனவரி 31ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தொடரும் கொரோனா (Corona to continue)
உலக நாடுகளை உலுக்கி எடுத்துவரும் கொரோனா வைரஸ் தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது. பின்னர் 2021ம் ஆண்டு மே மாதம் இரண்டாவது அலையாகப் பரவிய கொரோனா , டெல்டா, ஒமிக்ரான் என உருமாறியப் தொற்றுகளாக மாறி நம்மை அச்சுறுத்தி வருகிறது.
ஒமிக்ரானாக ஒருபுறம் மிரட்டிவருவதுடன், மறுபுறம் கொரோனா 3-வது அலையாகத் தற்போது, வேகமாகப் பரவி வருவதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரித்து உள்ளது.
ஊரடங்குக் கட்டுப்பாடுகள் (Curfew controls)
கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கைத் தொடர்ந்து ஏறுமுகத்திலேயே உள்ளது. இதைத்தொடர்ந்துத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், கடந்த 6ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன. இரவு 10:00 முதல் அதிகாலை 5:00 மணி வரை, இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
முதலமைச்சர் ஆலோசனை (Chief Minister's advice)
இந்நிலையில் மருத்துவ நிபுணர்கள் குழுவினர் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் முக்கிய ஆலோசனை நடத்தினார். இதையடுத்து முதல்வர் பின்வரும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
புதிய உத்தரவுகள் (New orders)
-
தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்குக் கட்டுப்பாடு, ஜனவரி 31 வரை நீட்டிக்கப்படுகிறது.
-
வழிபாட்டு தலங்கள் ஜனவரி. 14 முதல் 18 ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்களுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை.
-
வரும் 16-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
-
பொங்கல் பண்டிகையொட்டி வெளியூர்களுக்கு செல்லும் பேருந்தில் 75 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
-
ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை தொடரும், அனுமதிக்கப்பட்ட இதர செயல்பாடுகளும் தொடரும்.
-
கொரோனா வழிபாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல், விதி மீறும் வணிக நிறுவனங்களை மூட மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-
பொதுமக்கள் அனைவரும் தவறால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
பொதுமக்கள் அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டும் வெளியே செல்ல வேண்டும்.
-
பொதுஇடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தனி மனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.
-
கொரோனாக் கட்டுப்பட்டு விதிமுறைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு விதி மீறும் நிறுவனங்கள், தனிநபர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
முழு ஊரடங்கு அமல்- சென்னையில் பஸ், ஆட்டோ, மெட்ரோ ரயில்கள் ஓடாது!