News

Tuesday, 22 March 2022 08:31 AM , by: KJ Staff

Cyclone Storm in Andaman

தமிழகத்தில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்தமான் கடலில் இன்னும் 12 மணி நேரத்தில் புயல் உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரமடைந்து 48 மணி நேரத்தில் மியான்மர் கடற்கரையை நோக்கி நகரும் என்றும், மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய மத்திய கிழக்கு கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக பதிவாகும் என்றும் வானிலை மையம் தகவல் கூறியுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கும், மார்ச் 23, 24 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அசானி புயல் நெருங்கி வரும் நிலையில் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் கனமழை பெய்து வருகிறது. தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த சுமார் 150 பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர் மற்றும் தீவுகளின் பல்வேறு பகுதிகளில் ஆறு நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.

சூறாவளிக்கு அசனி என்று பெயரிட்டவர் யார்? இதற்கு என்ன அர்த்தம்?

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உள்ள வானிலை அமைப்பு திங்கள்கிழமை ஒரு சூறாவளி புயலாக வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு இலங்கையால் 'அசனி' என பெயரிடப்பட்டுள்ளது.

வானிலை புதுப்பிப்பு
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்கதேசம்-மியான்மர் கடற்கரையை நோக்கி நகர்ந்து வரும் மார்ச் 23-ம் தேதி கரையை கடக்க வாய்ப்புள்ளது.

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் சுற்றுலா நடவடிக்கைகள் மார்ச் 22 ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன, மேலும் அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க..

இன்று உருவாகாது புயல் சின்னம்- அப்பாடா - தப்பியதுத் தமிழகம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)