1. செய்திகள்

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு: பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மீண்டும் முதலிடம்

KJ Staff
KJ Staff

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று காலை 09:30 மணியளவில் வெளியானது. கடந்த மார்ச் மாதம் 14 ஆம் தேதி தொடங்கி 29 ஆம் தேதி தேர்வு நிறைவு பெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியிலிருந்து மொத்தம் 9 லட்சத்திற்கும் அதிகமான  மாணவர்கள் தேர்வு எழுதி இருந்தனர். 

தேர்வு முடுவுகளை மாணவர்கள் எளிதில் தெரிந்து கொள்ள கல்வி துறை பலவித முன் ஏற்பாடுகளை செய்திருந்தது. பள்ளி வளாகத்தினுள் முடிவுகளை காண ஏற்பாடு செய்திருந்தது. மேலும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள தேசிய தகவியலில் மையம், மாவட்ட நூலகம் இவற்றின் மூலம் தெரிந்து கொள்ள  ஏற்பாடு செய்திருந்தது. மேலும் குறுஞ்ச்செய்தி மூலமும் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டது.

பொது தேர்வில் மொத்தம் 12,548 பள்ளிகளில் உள்ள மாணவர்கள்  தேர்வு எழுதினார். இதில் 6100 பள்ளிகளில் 100%  தேர்ச்சி அடைந்துள்ளனர்.மொத்த தேர்ச்சி விகிதம் 95.2% மாணவ , மாணவியர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதில் மாணவியர்கள் 97%, மாணவர்கள் 95.2 % தேர்ச்சி பெற்றுள்ளனர்.    

பாண்டிச்சேரி மற்றும் காரைக்காலில் மொத்தம் 302 பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. இதில் 190 பள்ளிகளில் 100 % தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடந்தாண்டை விட  இவ்வாண்டு அதிகரித்து உள்ளது. திருப்பூர் மாவட்டம் அதிக தேர்ச்சி விகிதத்துடன் மீண்டும் முன்னிலையில் உள்ளது.

மே 2 ஆம் தேதி முதல் சான்றிதழ்களை தேர்வு எழுதிய மையத்திலிருந்து பெற்று கொள்ளலாம். மதிப்பெண் சான்றிதழ்கள்  கிடைத்து பதினைந்து தினங்களில் மாணவர்கள் பள்ளிகளின் மூலமாக வேலை வாய்ப்பு மையத்தில் பதிந்து கொள்ளலாம். நெரிசலை தவிர்க்கும் பொருட்டு கடந்த சில ஆண்டுகளாக அரசு பள்ளிகளின் மூலமாக இதனை செய்து வருகிறது.

பள்ளி மாணவர்கள் அல்லது, மூன்றாம் பாலினத்தவர்கள், கைதிகள் என பலரும் எழுதி இருந்தனர். கணிசன அளவில் இவர்களில் பெரும்பாலானோர் தேர்வாகி இருந்தனர்.  

English Summary: TN, Pondycherry and Karaikal SSLC Results Declared. Triupur Leading Again Published on: 30 April 2019, 04:45 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.