News

Wednesday, 18 October 2023 03:50 PM , by: Muthukrishnan Murugan

dearness allowance

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக உயர்த்தப்படுவதாக ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவின் மூலம் 48.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 67.95 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு ஜூலை 1, 2023 முதல் அமல்படுத்தப்படும் என்றும் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் அமைச்சரவை முடிவுகள் குறித்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு ஊழியர்களின் 7-வது ஊதியக் குழுவின் கீழ் அகவிலைப்படி ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே உயர்த்தப்படுகிறது. இது முதல் முறையாக ஜனவரியிலும், இரண்டாவது முறையாக ஜூலையிலும் உயர்த்தப்படுவது வழக்கம். ஆனால், இந்த அறிவிப்பு ஒவ்வொரு ஆண்டும் தாமதமாக வெளியிடப்படுகிறது. ஜனவரி மாத அகவிலைப்படி, கடந்த மார்ச் மாதத்தில் தான் அறிவிக்கப்பட்டது.

சமீபத்தில் மார்ச் மாதம் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 4% உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. இது ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளது. மீண்டும் அகவிலைப்படி உயர்வு தொடர்பாக மே 31-ம் தேதி மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

50 சதவீதத்தை எட்டும் அகவிலைப்படி:

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2024- ஆம் ஆண்டு சம்பளத்தில் பெரும் உயர்வு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆதாரங்களின்படி அகவிலைப்படி 2024 ஆம் ஆண்டு 50 சதவீதத்தை தாண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. காரணம் இன்று அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி ஜூலை மாதம் முதல் அகவிலைப்படி 4 சதவீதம் அதாவது (42-ல் இருந்து 46 ஆக) உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போது மொத்த DA Hike 46 சதவீதமாக இருக்கும், மேலும் 2024 ஜனவரியில் DA மேலும் 4% அதிகரிக்கப்பட்டால், ஜனவரியில் மொத்த DA 50% ஆக இருக்கும்.

50 சதவீதமாக உயரும் பட்சத்தில் அரசின் விதிகளின் படி, அடுத்த அமர்வின் போது மொத்த அகவிலைப்படி பூஜ்ஜியமாக (0) குறைக்கப்படும். 50 சதவீதமாக அகவிலைப்படி இருந்தால் (DA Hike), அது பூஜ்ஜியமாக்கப்பட்டு, ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன் அகவிலைப்படி பணம் சேர்க்கப்படும் என்ற விதி அமலாகும். இதற்குப் பிறகு அகவிலைப்படி பூஜ்ஜியத்தில் இருந்து மீண்டும் தொடங்கும். மத்திய அரசின் இந்த அறிவிப்பின் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த அகவிலைப்படி உயர்வினை எதிர்ப்பார்த்து நீண்ட நாட்கள் அரசு ஊழியர்கள் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தீபாவளி பண்டிகை வேறு நெருங்குவதால் அதற்கான போனஸ் தொகை அறிவிப்பும் விரைவில் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Read more :

குடியிருப்புகளுக்கான மின் கட்டணம் குறைப்பு- முதல்வர் அதிரடி அறிவிப்பு

தீபாவளி போனஸ் இவர்களுக்கு மட்டும் தான்- மத்திய அரசு அறிவிப்பு

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)