மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் (Delhi), விவசாயிகள் கடந்த இரு மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடந்த பல கட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், விவசாயிகள் அடுத்த கட்டப் போராட்டத்தில் இறங்க உள்ளனர். வருகின்ற பிப்ரவரி 18ஆம் தேதியன்று நான்கு மணி நேரம் நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டம் (Rail Stir Fight) நடைபெறும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
தீர்வு கிடைக்குமா?
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை விவசாயிகளுடன் பல்வேறு கட்டங்களாக அரசு பேச்சுவார்த்தை நடத்திவிட்டது. மேலும், விவசாயிகளின் போராட்டம் சர்வதேச அளவிலான கவனத்தை ஈர்த்துள்ளது. இவ்வளவு நடந்தபிறகும் விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு (solution) கிடைக்கவில்லை. வேளாண் சட்டங்களை (Agri bills) ரத்து செய்வதே ஒரே தீர்வு என விவசாயிகள் பிடிவாதமாக இருக்கின்றனர். மறுபுறம், வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு ஆபத்து இல்லை என அரசு அடம்பிடிக்கிறது.
இரயில் மறியல் போராட்டம்:
கடந்த வாரம் நாடு தழுவிய மூன்று மணி நேர சாலை மறியல் போராட்டத்தை (Road blockade struggle) விவசாயிகள் வெற்றிகரமாக நடத்தி முடித்தனர். இந்நிலையில், பிப்ரவரி 18ஆம் தேதியன்று நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டத்தை நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். பிப்ரவரி 18ஆம் தேதியன்று, மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை மொத்தம் நான்கு மணி நேரம் நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் தலைவர் தர்ஷன் பால் (Darshan Paul) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நான்காம் கட்டப் போராட்டம்:
இதுபோக, விவசாயிகளின் நான்காம் கட்ட போராட்டம் பிப்ரவரி 12ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ராஜஸ்தான் மாநில சுங்கச் சாவடிகளில் (Toll gate) இலவசமாக பயணிக்கலாம் என அறிவித்துள்ளனர். விவசாயிகள் போராட்டம் தொடங்கியதில் இருந்து நாடு முழுக்க பல்வேறு இடங்களில் சுங்கச் சாவடிகளை கைப்பற்றியுள்ளனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
வீடுகளுக்கு சூரிய ஒளி மின்சார திட்டம் இந்த மாதத்தில் அறிமுகம்
கொரோனா ஊரடங்கிலும் தானியங்கள் ஏற்றுமதியில் நல்ல முன்னேற்றம்! மத்திய அரசு தகவல்!