News

Monday, 31 May 2021 07:43 PM , by: R. Balakrishnan

Credit : Hindu Tamil

திருவாரூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் கோடை சாகுபடி (Summer Cultivation) பயிர்களான உளுந்து, எள், பயிறு, கடலை பணப் பயிர்களும் ஆங்காங்கே விவசாயிகளால் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. திருவாரூர் அருகே திருக்கண்ணமங்கை, எட்டியலூர், கமலாபுரம், மூழ்ங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பல பகுதிகளில் கோடை காலத்தில் பருத்தி சாகுபடியில் (Cotton Cultivation) விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதில் சிறு சிறு பாதிப்புகள் வந்தாலும் ஓரளவிற்கு லாபம் தரும் மகசூலும் கிடைத்து வருகிறது.

பருத்தி சாகுபடி

பருத்தி சாகுபடியில் விவசாயிகள் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது இப்பகுதிகளில் சுமார் 400 ஏக்கர்களுக்கு மேல் பருத்தி சாகுபடி நடைபெற்று வருகிறது. இது குறித்து பருத்தி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கூறுகையில், கடந்த 5 ஆண்டுகளாக பருத்தி சாகுபடியை மேற்கொண்டு வருகின்றோம். இதற்கு அதிக அளவில் தண்ணீர் தேவைப்படாது. அதிக அளவில் லாபம் இல்லை என்றாலும் பாதிப்பில்லை. சம்பா அறுவடை (Samba Harvest) முடிந்த பிறகு பருத்தி சாகுபடி செய்யலாம்.

இதற்கு 120 நாளிலிருந்து 140 நாட்களுக்குள் முதல் மகசூல் (Yield) ஆகிவிடும். அடுத்து அதிலேயே சரியான அளவு உரங்கள் மற்றும் இடுபொருட்கள் போட்டு கவனமாக மேற்கொண்டால் 2வது மகசூல் 30லிருந்து 40 நாட்களுக்குள் கிடைத்து விடும்.

மானிய விலையில் விதைகள்

2 மகசூல் கிடைப்பதாலும், குவிண்டால் ஏக்கருக்கு 4 ஆயிரம் வரை கிடைப்பதாலும் ஓரளவு விவசாயிகளுக்கு அதிக சிரமம் இல்லாமல் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதனால் தான் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றோம். எனவே பருத்தி சாகுபடியை ஊக்கப்படுத்த விவசாயிகளுக்கு பருத்தி விதைகளை 50 சதவீத மானிய விலையிலும் (50% Subsidy), அதற்கான இடுபொருட்களை இலவசமாக, தமிழக அரசு வேளாண் துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க

சம்பா பருவத்திற்காக விதை நெல் சுத்திகரிப்பு பணி தீவிரம்!

கொரோனாவால் மீண்டும் முடங்கியது தென்னங்கீற்று முடையும் தொழில்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)