பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 3 June, 2021 6:47 PM IST
Credit : Maalaimalar

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு திருவாரூர் உள்ளிட்ட பல இடங்களில் விவசாயிகளின் விளைபொருட்களுக்கான சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறுத் திட்டங்களைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஒப்பற்றத் தலைவர் (Peerless leader)

தமிழகத்தின் 5 முறை முதல்வர், மூத்த அரசியல் சாணக்கியன், முத்தமிழ் அறிஞர், சமூக நீதிப் போராளி, ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்றத் தலைவராக என பல பெயர்களுக்குச் சொந்தமானவர் கலைஞர் கருணாநிதி.

பெரியாரின் சலிக்காத உழைப்பும், பெருந்தலைவர் காமராஜரின் அயராத தொண்டும், பேரறிஞர் அண்ணாவின் பரந்த உள்ளமும் தன்னகத்தே கொண்டிருந்ததன் மூலம் உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் உள்ளங்களின் என்றும் வாழும் தலைவர்.

கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டுத் தமிழக அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகள்:

பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை (Multipurpose High Specialty Hospital)

நம் நெஞ்சமெல்லாம் வீற்றிருக்கும் கருணாநிதியின் நினைவைப் போற்றும் வகையில், சென்னைப் பெருநகரத்தில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில், 250 கோடி ரூபாய் செலவில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய, பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும்.

கலைஞர் நினைவு நூலகம் (Artist Memorial Library)

இரண்டு இலட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடிய வகையில், மதுரையில் 70 கோடி ரூபாய் செலவில், கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும்.

இலக்கிய மாமணி விருது (Literary Uncle Award)

இயல், இசை, நாடகத்தில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து, சிறப்பிக்கும் வகையில், இலக்கிய மாமணி என்ற விருது உருவாக்கப்பட்டு, தமிழின் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள் மூன்று பேருக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படும். இந்த விருதைப் பெருபவர்களுக்கு பாராட்டுப் பத்திரம் மற்றும் ஐந்து இலட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.

எழுத்தாளர்களுக்கு அரசு வீடு (Government House for Writers)

தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகள் பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக வீடு வழங்கப்படும்.

கூடுதல் கிடங்குகள் (Additional warehouses)

திருவாரூர் மாவட்டத்தின் நெல் உற்பத்தியினை கருத்தில் கொண்டும், விவசாய விளைபொருட்கள் மழை வெள்ள பாதிப்பினால் சேதமடைவதை தவிர்ப்பதற்கும் கிராமப்புற அளவில் கூடுதலாகக் கிடங்குகள் கட்டுமானம் செய்வது விவசாயிகளுக்குப் பேருதவியாக அமையும்.

சேமிப்புக் கிடங்குகள் (Warehouses)

விவசாயிகளின் நலன் காக்கும் இந்த அரசு, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, மன்னார்குடி, கோட்டூர், நீடாமங்கலம், நன்னிலம், குடவாசல், கொரடாச்சேரி மற்றும் வலங்கைமான் வட்டாரங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் காலியாக உள்ள இடங்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் இனங்கண்டு ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களிலும் ரூபாய் 24 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் 16,000 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும்.

உலர்விக்கும் களங்கள் (Drying domains)

  • மேலும், அறுவடைக்குப் பின் தானியம் மற்றும் பயறு வகைகளைச் சரியான முறையில் உலர வைக்காததால் ஏற்படும் இழப்பினை தவிர்க்க விவசாயிகள் நலன் கருதி திருவாரூர் மாவட்டத்தில் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் 10 வட்டாரங்களில் சூரிய ஒளியில் உலர்விக்கும் 50 களங்களும், கோட்டூர் மற்றும் வலங்கைமான் வட்டாரங்களில் ரூபாய் 60 லட்சம் மதிப்பீட்டில் 2 மறுசுழற்சி தொகுப்பு உலர்விப்பான்களும் அமைக்கப்படும்.

  • மேலும் நீடாமங்கலம் மற்றும் மன்னார்குடி வட்டாரங்களில் ரூபாய் 60 லட்சம் மதிப்பீட்டில் 2 தொடர் ஓட்ட உலர்விப்பான்களும் ஆகமொத்தம் ரூபாய் 6 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் 54 உலர்களம் மற்றும் உலர்விப்பான்கள் ஏற்படுத்தப்படும்.

விரைவில் அமலுக்கு வருகிறது (Coming into effect soon)

மகளிர் நலன் கருதி இந்த அரசு பொறுப்பேற்ற அன்றே முதலமைச்சர் அவர்கள் மகளிருக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவச பயணச் சலுகையை அறிவித்துள்ளார்கள்.
அதன் தொடர்ச்சியாக, மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கும் நகரப்புற அரசு பேருந்துகளில் இலவச பயண சலுகை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஊரடங்கு காலம் விலக்கிக் கொள்ளப்பட்டவுடன் இந்த ஆணை நடைமுறைக்கு வரும்.

மேலும் படிக்க....

கொரோனா நிவாரண நிதி: ரூ.2000 பெறாதவர்கள் இம்மாதம் பெற்றுக்கொள்ளலாம்!!

ஊரடங்கை பயனுள்ளதாக மாற்ற மரக்கன்றுகளை நடும் இளைஞர்கள்!

300 கிலோ உரத்தை 5 டன் உரப் பயன்பாட்டுக்கு சமமாக மாற்றுவது எப்படி?

English Summary: Different Schems for Karunanidhi's birthday - Government of Tamil Nadu announces!
Published on: 03 June 2021, 06:40 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now