கடந்த சில நாட்களாகப்பெய்த மழை காரணமாக விவசாயிகளிடம் இருந்து நெல்லைக் கொள்முதல்செய்வதில் ஏற்பட்ட சிரமத்தைப் போக்க ஏதுவாக, ஞாயிற்றுக்கிழமையான இன்றும் மாநிலம் முழுவதும் நேரடிக் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன.
நெல் கொள்முதல் நிலையங்கள் (Paddy procurement Centers)
அக்டோபர் 1 முதல் புதிய காரிப் சீசன் துவங்கி உள்ளதால், தமிழகத்தின் தென் பகுதியில் குறுவை அறுவடை பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதனால் தங்களது நெல்லை விற்பனை செய்ய ஏதுவாக டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் 523 நேரடி நெல் கொள்முதல் (Direct paddy procurement Centers)நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
தஞ்சையில் 227, திருவாரூரில் 189, நாகையில் 126, கடலூரில் 43 என மொத்தம் சேர்த்து டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் 523 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன.
அமைச்சர் உத்தரவு (Minister orders)
இதுகுறித்து தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை தமிழகத்தில் 32 லட்சத்து 40 ஆயிரத்து 990 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 5 லட்சத்து 85 ஆயிரத்து 241 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக 6136 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.
சன்னரக நெல், குவிண்டால் ஒன்றுக்கு 70 ரூபாய் ஊக்கத்தொகை சேர்ந்து ஆயிரத்து 958 ரூபாய்க்கும், பொது ரக நெல், 50 ரூபாய் ஊக்கத்தொகை சேர்த்து ஆயிரத்து 918 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.டந்த சில நாட்களாக டெல்டா மாவட்டங்களில் பெய்து வந்த மழையின் காரணமாக, நெல் மணிகள் மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கியதால் விவசாயிகள் கவலையடைந்தனர்.
இந்நிலையில் நெல் மணிகளின் ஈரப்பதத்தை கணக்கிடாமல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனை ஏற்று ஞாயிற்றுக்கிழமையான இன்றும் தமிழகம் முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் என்றும் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் தினந்தோறும் ஆயிரம் மூட்டைகள் வரை நெல் கொள்முதல் செய்யப்படும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.மேலும் தேவையான இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க அனுமதி வழங்குமாறு ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்க...
மழைக்காலங்களில் தரமான பருத்தி விதைகள் தேர்வு அவசியம்!
இயற்கை சாகுபடிக்கு ரூ.4 ஆயிரம் வரை ஊக்கத்தொகை - விவசாயிகளுக்கு அழைப்பு!