ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம், தகுதி மற்றும் தேர்வு செயல்முறைக்கான அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ஐஐஐடி-என்ஆர் ஆசிரியர்களின் மேற்பார்வையின் கீழ் ஐஐஐடி-என்ஆரில் (IIIT-NR) 6 முதல் 8 வாரங்கள் இன்டர்ன்ஷிப்பிற்கு விண்ணப்பிக்க இந்தியா முழுவதும் உள்ள மாணவர்கள் அழைக்கப்படுகிறார்கள். அவுட்ரீச் இன்டர்ன்ஷிப் திட்டம் ( Outreach Internship Programme - OIP) என்பது IIIT நயா ராய்பூரின் ஆராய்ச்சிகளில் ஒன்றாகும். நாடு முழுவதும் உள்ள மதிப்புமிக்க நிறுவனங்களிலிருந்து மாணவர்களை வளாகத்திற்கு அழைத்து பயிற்சிகளை வழங்குவதாக இருக்கின்றது. இந்த நிகழ்வு 2017 ஆண்டு முதல் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.
OIP திட்டம் பங்கேற்பாளர்களைத் தற்போதைய ஆராய்ச்சி திட்டங்களில் பங்கேற்க பெரிதும் உதவியாக இருக்கிறது. அதோடு ஒரே நேரத்தில் மாணவர்கள் கல்வித் திட்டங்களின்கீழ் கோடைகால பயிற்சித் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகிறது.
இன்டர்ன்ஷிப்பை மேற்கொள்ளும் முறை: அரசாங்க வழிகாட்டுதல்களின்படி, தற்போதைய சூழ்நிலையைப் பொருத்து மாணவர்கள் மற்றும் ஆசிரிய உறுப்பினர்களுக்கு இடையேயான தொடர்பு மூலம் ஆன்லைன்/ஆஃப்லைன் முறையில் நடத்தப்பட இருக்கிறது.
IIIT-NR இன்டர்ன்ஷிப் 2022: விண்ணப்பிக்கத் தகுதி
இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பைத் தொடரும் கல்லூரி அல்லது பல்கலைக்கழக மாணவர்கள் IIIT-NR இல் இன்டர்ன்ஷிப் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். விண்ணப்பதாரர் CSE, IT, ECE, ETE, EE, EEE, EI, கணிதம், இயற்பியல், மேலாண்மை மற்றும் தொடர்புடைய பின்னணி உள்ளவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தனது இறுதி செமஸ்டரை முடித்தவராக இருக்க வேண்டும்.
IIIT-NR இன்டர்ன்ஷிப் 2022: கால அளவு
ஒவ்வொரு பயிற்சியாளரும் இண்டன்ஷிப் முடியும் வேளை வரை சுமார் 6 முதல் 8 வாரங்கள் வரை ஆஃப்லைன் முறையில் பணியாற்றினால் உதவித்தொகை கிடைக்கும். அதோடு ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
மேலும் படிக்க
அரசாங்க வேலைகளில் 26904 காலியிடங்கள்: 10வது 12வது தேர்ச்சி போதும்!