தென்காசி மாவட்டத்தில் கீழப்பாவூரை சார்ந்த விவசாயி மாரியப்பன் கடந்த சில ஆண்டுகளாக கால்நடைகளை வைத்து பராமரித்து வருகிறார். தன்னுடைய அனுபவத்தில் மூலம் தெரிந்துக்கொண்ட தகவல்களை மற்ற விவசாயிகளுக்கு நியூஸ் 18 உள்ளூர் செய்தி மூலம் பகிர்ந்தார்.
அப்போது பேசிய அவர், ”கறவை மாடுகள் அதிகம் பால் கறக்க அதற்கு உணவாக இந்த சீமை புல்லை பயன்படுத்த வேண்டும். இதனை மாடு, ஆடு வளர்ப்பவர்கள் பெருவாரியாக இதனை வளர்த்தால் பயன் நிச்சயம் பெறலாம். நெல் போன்ற பயிர்களை பயிரிட சரியான காலம் இல்லை என்றல் நிலத்தை வீணாக போடுவதற்கு பதிலாக இதனை பயிரிடுவர்.
இதற்கு வெறும் 30 நாட்களே தேவை படும். 30 நாட்கள் ஆனாவுடன் இதனை மாடுகள் மற்றும் ஆடுகளுக்குஉணவாககொடுக்கலாம். இதற்கு மாதம் இரண்டு முறை நீர் தெளித்தால் போதுமானது. இதற்கு பெரிய அளவில் நீரும் தேவை படாது. சீமை புல்லை கால்நடைக்கு கொடுப்பதால் அதிக அளவில்பாலை இயற்கையாகவே கொடுக்கும் தன்மையை மாடுகள் அடைந்துவிடுகிறது.
இந்த புல் 60 நாட்கள் வளர்ந்துவிட்டால் அதில் வளர்ந்து வரும் தளிரை மீண்டும் ஊன்று பயன்படுத்தலாம். இது வியாபார நோக்கில் செய்யக்கூடியது அல்ல வெறும் கால்நடைகாகவே பயிரிடக்கூடிய ஒன்றாகும். இதனை பயிறிட்டு கால்நடைகளுக்கு உணவாக வழங்கினால் நிச்சயமாக அதன் வளர்ச்சி மற்றும் பால் அதிகரிக்கும் என்று கூறி மாரியப்பன் மீண்டும் தன் தோட்டத்து வேலைகளை செய்ய கிளம்பினார்.
மேலும் படிக்க: