News

Friday, 23 September 2022 07:56 AM , by: R. Balakrishnan

Do not do this in Ration shop

தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் (ரேஷன் கடை) மூலம் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களான அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில், மண்ணெண்ணெய் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்த உதவிகள் கிடைக்கும். ரேஷன் அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்கள் மட்டுமல்லாமல் நிதியுதவி போன்ற அரசின் நலத்திட்ட உதவிகளும் கிடைக்கின்றன.

ரேஷன் கடை (Ration shop)

பெரும்பாலான ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களுடன் சோப்பு, உப்பு போன்ற மற்ற பொருட்களையும் வாங்க அங்குள்ள ரேஷன் கடை ஊழியர்கள் பொதுமக்களை கட்டாயப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவ்வாறு பொதுமக்களை கட்டாயப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து ஐ.பெரியசாமி அளித்த பேட்டியில், ரேஷன் கடைகளில் சோப்பு உள்ளிட்ட மற்ற பொருட்களை வாங்க எந்த ஊழியர்களும் கட்டாயப்படுத்த கூடாது. அவ்வாறு யாரேனும் கட்டாயப்படுத்தினால் அந்த ரேஷன் கடை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து பொதுமக்கள் தாராளமாக புகார் அளிக்கலாம் என்று கூறியுள்ளார்.

ரேஷன் கடைகளில் இதுபோல நிறைய பிரச்சினைகளை வாடிக்கையாளர்கள் சந்திப்பதாகப் புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன. இதுமட்டுமல்லாமல் ரேஷன் அரிசி கடத்தல் போன்ற சம்பவங்களும் தொடர்ந்து நடைபெறுகின்றன. இந்த விஷயத்தில் தமிழக அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

மேலும் படிக்க

இனிமே ரேஷன் கார்டு கேன்சல் ஆகாது: அரசு முக்கிய அறிவிப்பு!

ரேசன் கார்டில் மோசடி: தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)