News

Wednesday, 12 May 2021 02:57 PM , by: Sarita Shekar

தினமும் 50 ரூபாயைச் சேமித்து உங்களது ஓய்வுக் காலத்தில் 34 லட்சம் சம்பாதிக்க அருமையான திட்டம் உள்ளது.

தேசிய சேமிப்புத் திட்டம் என்பது மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மிக சிறந்த முதலீட்டுத் திட்டமாகும். இந்த திட்டம் 2004 ஆம் ஆண்டில் அரசு ஊழியர்களுக்காக மட்டுமே தொடங்கப்பட்டது. அதற்க்கு பின்னர் 2009 ஆம் ஆண்டில் அனைத்து பொதுமக்களுக்கும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. 18 முதல் 65 வயது வரை உள்ள எந்தவொரு இந்தியக் குடிமகனும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

இத்திட்டத்தின் பயன்கள் என்ன?

தேசிய பென்சன் திட்டத்தின் கீழ் இப்போது பயனர்களுக்கு 8 முதல் 10 சதவீதம் வரையில் வட்டி லாபம் கிடைக்கிறது. இதுமட்டுமல்லாமல், இத்திட்டத்தின் கீழ் வருமான வரிச் சட்டம் 80சC-யின் கீழ் வரிச் சலுகை வழங்கப்படுகிறது. இதன்படி, ரூ.15 லட்சம் கோடி வரையில் வரிச் செலவு மிச்சமாகும். இத்திட்டத்தில் டையர் 1, டையர் 2 என இரண்டு பிரிவுகள் உள்ளன. டையர் 2 பிரிவில் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் சேமிப்புப் பணத்தை எடுக்கலாம்.

34 லட்சம் வரை லாபம் பெறலாம்

தேசிய பென்சன் திட்டத்தில் நீங்கள் தினமும் 50 ரூபாய் சேமித்து வந்தாலே போதும். உங்களின் ஓய்வுக் காலத்தில் உங்களுக்கு ரூ.34 லட்சம் கிடைக்கும். உங்களது 25 ஆவது வயதில் இத்திட்டத்தில் நீங்கள் சேமிக்கத் தொடங்கினால் 35 ஆண்டுகள் கழித்து, அதாவது உங்களது 60 ஆவது வயதில் உங்களிடம் பெரிய தொகை கையில் இருக்கும். உங்களது சேமிப்புத் தொகை ரூ.6.30 லட்சம் மட்டுமே. 10 சதவீத வட்டியில் உங்களுக்குக் கிடைக்கும் லாபம் ரூ.27.9 லட்சம். ஓய்வுக் காலத்தில் உங்களுக்கு கிடைக்கும் மொத்த தொகையின் மதிப்பு ரூ.34.19 லட்சம் ஆகும்.

இந்த திட்டத்தின் மூலம் மாதம் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்?  

மேலே கூறிய தொகை அனைத்தையும் மொத்தமாக நீங்கள் வித்டிரா செய்ய முடியாது. அதில் 60 சதவீதத்தை மட்டுமே எடுக்கலாம். எஞ்சிய தொகையை ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியமாக வாங்கிக்கொள்ளலாம். நீங்கள் 60 சதவீத தொகையை, அதாவது ரூ.20.51 லட்சத்தை எடுத்துவிட்டால் மீதமுள்ள தொகையை வைத்து உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 9,000 ரூபாய் பென்சன் கிடைக்கும்.

மேலும் படிக்க..

அஞ்சலக சேமிப்பு கணக்கில் இருப்புத்தொகை ரூ.500 ஆக உயர்த்த நாளை கடைசி நாள்!!

வெறும் 95 ரூபாய் முதலீடு செய்தால் - ரூ. 14 லட்சம் கிடைக்கும்-முழு விபரம் உள்ளே!

அஞ்சலக சேமிப்புக் கணக்கிலும், இனி அரசு மானியங்களைப் பெறலாம் - விபரங்கள் உள்ளே!

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)