1. செய்திகள்

அஞ்சலக சேமிப்பு கணக்கில் இருப்புத்தொகை ரூ.500 ஆக உயர்த்த நாளை கடைசி நாள்!!

Daisy Rose Mary
Daisy Rose Mary
Credit :Dailythanthi

அஞ்சலக சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகை ரூ.500 ஆக உயர்த்த நாளை கடைசி நாள் என்று அஞ்சல்துறை தெரிவித்துள்ளது. 

இது குறித்து சென்னை அஞ்சலக மூத்த கண்காணிப்பாளர் (தெற்கு பிரிவு) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்குகளின் (Post office savings scheme) குறைந்தபட்ச இருப்புத்தொகை ரூ.50 ஆக இருந்தது. இதை ரூ.500 ஆக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி இந்த விதிமுறை கடந்த ஆண்டு டிசம்பர் 12-ந் தேதி நடைமுறைக்கு வந்தது.

எனவே, சேமிப்பு கணக்கு தொடங்கியவர்கள் குறைந்தபட்ச இருப்புத்தொகையை ரூ.500 ஆக உயர்த்திக்கொள்ள வேண்டும். இதற்கு டிசம்பர் 11-ந் தேதி (நாளை) வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

 இருப்புத்தொகையை ரூ.500 ஆக உயர்த்தாத பட்சத்தில், மார்ச் மாதம் முதல் அபராத கட்டணமாக வாடிக்கையாளர் கணக்கில் இருந்து ரூ.100 ஒவ்வொரு ஆண்டும் கழிக்கப்பட்டு, இருப்புத்தொகை குறைக்கப்பட்டு, கணக்கு காலாவதி ஆகிவிடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க..

PM Kisan திட்டத்தின் 7-வது தவணைக்கு காத்திருப்பவரா நீங்கள்? இந்த தகவல் உங்களுக்கு தான்?

டிச.6யை பாரம்பரிய நெல் தினமாக அறிவிக்க வேண்டும்- தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை!

English Summary: Minimum Balance of Rs 500 Must Be available in post office savings account, if Fails it ll be charged Fine For Non-maintenance from Dec 12 Published on: 07 December 2020, 11:39 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.