News

Monday, 12 September 2022 03:20 PM , by: Poonguzhali R

Dramatically low price of eggs!

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் முட்டையின் விலை குறைந்துகொண்டே வருகின்றது. இன்று ஒரு நாளில் மட்டும் முட்டை ஒன்றிற்கு ரூ.20 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. இன்றைய நாளின் முட்டை விலை என்ன? ஏன் இந்த சரிவு என்பனவற்றைக் குறித்து விரிவான தகவலை இப்பதிவு விளக்குகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. முன்னர் முட்டை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளாக இருந்தது. ஒரே நாளில் 20 காசுகள் விலை குறைந்துள்ளது.

மேலும் படிக்க: பெண்களுக்கு ரூ. 6000 கிடைக்கும் மத்திய அரசின் திட்டம்: இன்றே அப்ளை பண்ணுங்க!

இந்த விலை‌க் குறைப்பு குறித்துப்‌ பண்ணையாளர்கள் கூறுகையில், தமிழகம் மற்றும் கேரளாவில் முட்டைக்கான தேவை குறைந்து விற்பனை குறைந்ததால் விலையும் குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். அதோடு, இனி வரும் காலங்களில் முட்டை விலை உயரவே வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கின்றனர்.‌

சென்னையைப் பொறுத்தவரையில், கொள்முதல் நிலையில் முட்டை ஒன்றின் விலை 4 ரூபாய் 80 காசுக்கு விற்கப்படுகிறது. சில்லரை விற்பனையில் 5 ரூபாய்க்கு மேல் முட்டை விற்பனை செய்யப்படுகிறது. இரு தினங்களுக்கு முன் நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளாக இருந்தது.

இந்த நிலையில் தற்போது முட்டையின் விலை குறைந்துள்ளதால் அசைவப் பிரியர்களும் இல்லத்தரசிகளும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இந்த மாதத் தொடக்கம் முதலே முட்டை விலை குறைந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

கால்நடைகளின் தோல் கட்டி நோயைக் குணப்படுத்த தடுப்பூசி!

தொழில்நுட்பம் விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்க உதவும்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)