தமிழகத்தில் தற்போது போக்குவரத்துத் துறை சேவைகள் இணையவழியாக வழங்கப்பட்டு வரும் நிலையில், ஒரு சில ஆவணங்கள் தபால் மூலமாக விநியோகம் செய்ய தமிழக போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.
போக்குவரத்து துறை சேவைகள்
தமிழகத்தில் போக்குவரத்து துறையில் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், பழகுநர் உரிமம் பெறுதல், ஓட்டுநர் உரிம முகவரி மாற்றம் போன்ற 6 சேவைகள் இணைய வழியாக பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது தவிர 42 சேவைகள் இணையவழியில் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இணையவழியாக செய்யும் நடைமுறைகள் மூலமாக அலுவலகத்தில் இடைத்தரகர்கள் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதோடு, துறை மீதான லஞ்ச குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஓட்டுநர் உரிமம் (Driving licence)
ஓட்டுநர் உரிமம், பதிவுச் சான்று போன்றவற்றை தபால் மூலமாக விண்ணப்பதாரர்களுக்கு அனுப்ப போக்குவரத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக தபால் துறையுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதற்காக வழக்கமான உரிமம் மற்றும் பதிவுச் சான்று கட்டணத்துடன் கூடுதலாக ரூ.50 வசூலிக்கப்படும் எனவும், சொந்த பயன்பாட்டுக்கான வாகனங்களுக்கு அதிகபட்சம் ரூ.1,150 வசூலிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பதிவுச் சான்றைப் பொறுத்தவரை சாலை பாதுகாப்பு வரி, வாழ்நாள் வரி, சேவை கட்டணம் தவிர்த்து அதிகபட்சமாக ரூ.650 வசூலிக்க வாய்ப்பு இருப்பதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க
இயற்கை விவசாயத்திற்கு மவுசு: திருப்பதி லட்டு இனி இப்படித் தான் தயாரிக்கப்படும்!
அரசுப் பணியாளர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: மாநில அரசு அறிவிப்பு!