விவசாயம் மற்றும் விவசாயிகளை மனதில் வைத்து விவசாயத்துறையில் மேலும் மேலும் முன்னேற்றத்திற்காக விவசாய விழிப்புணர்வு குறித்த செயல்பாடுகளை எப்போதும் கிரிஷி ஜாக்ரன் செய்து வருகிறது. அந்த வகையில் விவசாயம் குறித்து விவாதிக்க, விவசாயத் துறையில் திறமையாகச் செயல்படும் வல்லுநர்களை வேளாண் விழிப்புணர்வை வழங்க கிரிஷி ஜாக்ரன் அழைக்கின்றது. இந்நிலையில் இன்று கிரிஷி ஜாக்ரன் தலைமை அலுவலகத்திற்கு இந்தியாவின் ட்ரோன் கூட்டமைப்பின் தலைவர் திரு. ஸ்மித் ஷா வருகை தந்தார்.
இந்தியாவின் ட்ரோன் கூட்டமைப்பு தலைவர் ஸ்மித் ஷா விவசாய விழிப்புணர்வு வழங்க கேஜே சௌபலில் இணைந்தார். கிரிஷி ஜாக்ரன் நிறுவனர் மற்றும் தலைமை ஆசிரியர் எம்.சி.டோமினிக் மற்றும் ஊழியர்கள் அனைவரும் ஸ்மித் ஷாவை வரவேற்றனர். கிரிஷி ஜாகரனுடன் தனது மதிப்புமிக்க நேரத்தையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டதற்காக ஸ்மித் ஷா-வுக்கு கிரிஷி ஜாகரன் நன்றி தெரிவித்துக் கொண்டது.
ஸ்மித்ஷா பேசுகையில் விவசாயத் துறையில் தொழில்நுட்பம் சார்ந்த ட்ரோன் பயன்பாடுகள் அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் பயிர் மதிப்பீடு, உரம் இடுதல், நிலப் பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்குதல், பூச்சி மற்றும் ஊட்டச்சத்து கருவிகள் முதலான தொழில்நுட்பங்கள் செயல்படுத்தப்படும். நாட்டில் விவசாயத்தில் ட்ரோன்கள் மிகுந்த அளவில் பயன்படுத்தப்படும். விவசாயிகளுக்கு ட்ரோன் பெருமளவில் உதவும். ஆளில்லா விமானம் மூலம் விவசாயிகள் தங்கள் நேரத்தை மிச்சப்படுத்துவதுடன் வருமானத்தையும் பெருக்கிக்கொள்ள முடியும் எனக் கூறினார்.
மேலும் அவர், ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படாத நிலத்தில் இயற்கை விவசாயத்தை நேரடியாகப் பயன்படுத்தி இயற்கை பயிர்களை அறுவடை செய்யலாம். முதலாவதாக, நிலத்தில் சாகுபடி முறைகள், உரங்களின் பயன்பாடு மற்றும் பூச்சி கட்டுப்பாடு ஆகியவற்றில் மாற்றம் ஏற்பட வேண்டும். இயற்கை விவசாயத்தை ஒவ்வொரு நிலையிலும் பின்பற்ற வேண்டும். கரிம உரங்களின் உற்பத்தி காய்கறி ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கூறினார்.
இவரது கருத்துக்களின் வழியாக ஆளில்லா விமானங்கள் மூலம் விவசாயிகள் பயிர்களுக்குப் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து நேரத்தை மிச்சப்படுத்துவதுடன், விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கவும் உதவும் என்பது தெரியவந்துள்ளது.
அதோடு, விவசாயிகளுக்கு 40% மானியத்தில் ட்ரோன் கிடைக்கும் எனவும், எஞ்சியுள்ள 60% தொகையை வங்கிகளில் கடனாகப் பெற்றுக்கொள்ளலாம் என்ற தகவலையும் தெரிவித்தார். விவசாயிகளுக்கு ட்ரோன்-ஐ இயக்க KVK சார்பில் பயிற்சிகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். இத்தகைய பயிற்சிகளைப் பெறுவதற்கு விவசாயிகள் digitalsky.dgca.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் விவரங்களைப் பதிவு செய்து பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்தார்.
ட்ரோன்களை இயக்கக் கற்றுக்கொள்வதன் மூலம் நல்ல வருமானத்தினைப் பெறலாம் எனவும், இத்தகைய பயிற்சிக்கு விவசாயிகள் 5 நாட்கள் செலவிட்டால் போதும் அதாவது 40 மணிநேரத்தில் ட்ரோன் இயக்குதலைக் கற்றுக்கொள்ளலாம் எனவும் கூறினார். இறுதியாக, அனைத்து விவசாயிகளும் விவசாயத்தில் ட்ரோன்களை இயக்கி அதிக வருமானம் ஈட்ட வேண்டும் எனவும், ட்ரோன்கள் விவசாயிகளைச் சென்றடைய இந்திய ட்ரோன் கூட்டமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வரும் எனவும் உறுதியளித்தார்.
மேலும் படிக்க
இன்றைய வேளாண் தகவல்கள்: டாடா மோட்டார்ஸ்-இன் ஓய்வு பெற்ற அதிகாரி கிரிஷி ஜாக்ரனுக்கு வருகை!