கொரோனா தடுப்பூசி விநியோகத்திற்கு, 'டிரோன் (Drone)' எனப்படும், ஆளில்லா குட்டி விமானத்தை பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திற்கு, விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
டிரோன் மூலம் தடுப்பூசி
இந்தியாவில், மே 1 முதல், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) போட, அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், மலைப் பிரதேசங்களில் தடுப்பூசிக்கான தேவை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அத்தகைய சூழலில், டிரோன்களை பயன்படுத்துவது சாத்தியமா என, அரசு பரிசீலித்து வருவதாக தெரிகிறது. இதையொட்டி, விமான போக்குவரத்து அமைச்சகம், டிரோன் மூலம் தடுப்பூசி விநியோகிப்பது குறித்து ஆய்வு செய்ய, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், மக்களுக்கு தடுப்பூசி போடுவது அதிகரித்து வருகிறது. மலைப்பகுதியில் தடுப்பூசிகளை எடுத்துச் செல்வதில் சிரமம் ஆக இருக்கும் என்பதால், டிரோன்களை பயன்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளது.
உத்தரகண்டில், டேராடூன், ஹரித்துவார் உள்ளிட்ட நான்கு நகரங்களில், அசையா சொத்துக்களின் தகவல்களை சேகரிக்க, டிரோன்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதுபோல, ரயில் விபத்து பகுதிகளையும், ரயில்வே சொத்துக்களையும் அடையாளம் காண, மேற்கு மத்திய ரயில்வே, டிரோன் பயன்படுத்த ஒப்புதல் தரப்பட்டுள்ளது. தனியார் துறையில், வேதாந்தா குழுமத்திற்கு, அதன் கனிம வளங்களை ஆய்வு செய்ய, நிபந்தனைகளுடன் டிரோன் பயன்படுத்த அனுமதி தரப்பட்டுள்ளது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
உலக பூமி தினம்! பிளாஷ்டிக்கை தவிர்த்து, நம் பூமியை மீட்டெடுப்போம்!
கொரோனா தடுப்பூசிக்கு ஏப்ரல் 24 முதல் முன்பதிவு துவக்கம்! 18 வயதை கடந்தவர்கள் பதிவு செய்யலாம்!