வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலையுடன், ஓரிரு பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதி மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இலேசான மழையும், வட தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும். அடுத்து வரும் 3 நாட்களுக்கு தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழையும், வட தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும் என தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
-
டிசம்பர் 21 தென் தமிழக கடலோர பகுதிகள் , குமரிக்கடல், மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
-
டிசம்பர் 22 குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் மாலத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் எனவும் சென்னை வானிலை மையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க...
கல்லா கட்டும் "கடக்நாத்" - கருங்கோழி வளர்ப்பின் வளமும் நலமும்..!
கிராமத்து தமிழ் ரசிகன்: 1.5 கோடி விலை நிர்ணயிக்கப்பட்ட விநோதமான ஆடு! அசர வைக்கும் வசீகரம்!
ஆடு வளர்ப்பில் வருவாய் ஈட்ட சிறந்த வழி! முதலீடு செய்ய அழைப்பு!