1. கால்நடை

அதிக லாபம் தரும் கருங்கோழி வளர்பும், உத்திகளும்!

Daisy Rose Mary
Daisy Rose Mary

Credit: agrifarmideas

கால்நடை வளர்ப்பில் அதிக லாபம் தரும் தொழில்களில் மிக முக்கியமாக கருங்கோழி வளர்ப்பு உள்ளது. "கடக்நாத்" கருங்கோழி யின் பூர்வீகம் மத்திய பிரதேசம். இங்கு தான் இந்த வகை கோழிகள் அதிகளவில் காணப்படுகிறது. கருக்கோழியானது அனைத்து வித சூழலுக்கேற்பவும் வளரக்கூடியது. இந்த கருங்கோழியை வளர்க்கும் முறைகளும் அதன் மருத்துவ குணநலன்கள் மற்றும் வர்த்தக முறைகள் குறித்தும் இங்கு விரிவாக காணலாம்..

கருங்கோழி (Kadaknath)

கரு, கருவெனயிருக்கும் கடக்நாத் கோழியின் இறக்கைகள் மட்டுமின்றி, அதன் இறைச்சி, எலும்பு, இரத்தம், என சகலமும் கறுப்பு தான். இந்தக் கோழிகளில் மெலனின் என்ற நிறமி அதிகம் இருப்பதே இதன் கறுமைத்தன்மைக்குக் காரணம். இதன் பூர்வீகம் மத்தியபிரதேசம். இக்கோழியை அம்மாநில மக்கள் ‘காளி மாசி’ என்ற பெயரில் அழைக்கிறார்கள். காளி மாசி என்றால் காளியின் தங்கை என்று பொருள். நம்மூரில் கருங்கோழிகள் என்று அழைக்கப்படுகிறது.

கோழியின் குணாதிசயங்கள்

இந்த கருங்கோழியின் சராசரி எடை சேவல் ஆறு மாதத்திற்கு ஒன்றரை கிலோ வரை இருக்கும். பெட்டை கோழி ஒரு கிலோ வரை வளரும் தன்மை கொண்டது. இந்த கடக்நாத் வருடத்திற்கு 100லிருந்து 150 முட்டைகள் வரை இடும். இந்த கோழி அடை காக்கும் திறன் மிகவும் குறைவு அதனால் இதனை இந்த கோழி இனம் படிப்படியாக குறைந்து கொண்டிருக்கிறது.

கருங்கோழி வளர்ப்பு பராமரிப்பும்

முட்டை பொரிச்சு கோழிக்குஞ்சுகள் பிறந்த முதல் 20 நாளுக்கு செயற்கையா வெப்பம் தர வேண்டும். தகரத்தை வட்ட வடிவில் அமைத்து 100 வாட்ஸ் பல்புகளைத் தொங்கவிட்டால் போதும். 100 குஞ்சுகளுக்கு 100 வாட்ஸ் பல்பு போதுமானதாக இருக்கும். அதிகமான எண்ணிக்கையில் கோழிக்குஞ்சுகள் இருப்பின், பல்புகளின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இரவு நேரங்களில் கோழிக்குஞ்சுகள் மீது குளிர் காத்து தாக்காத அளவுக்கு மறைப்பு அமைக்க வேண்டும். 20 நாட்களுக்கு பின் குஞ்சுகளை கொட்டகைக்கு மாற்றலாம். நான்கு புறமும் 2 அடி உயரத்துக்குச் சுவர் எழுப்பி, அதுக்கு மேல வலையால அடைத்து கொட்டகை அமைக்க வேண்டும். தரைப்பகுதியில் நிலக்கடலை தோலைப் பரப்பிவிட்டால், மெத்தை போன்று இருக்கும்.

மாதந்தோறும் லாபம் வழங்கும் கோழிப்பண்ணை! இப்போதே அமைக்க கடன் வழங்கும் வங்கிகள்! வாங்க தொழில் தொடங்கலாம்..!!

கருங்கோழிக்கான சிறந்த தீவனங்கள்

  • இந்த கருங்கோழிகளுக்கு நாட்டு மருந்து அல்லது இயற்கை தீவனங்களே போதுமானது.

  • மணத்தக்காளிக் கீரையை அடிக்கடி கோழிகளுக்குக் கொடுத்து வந்தால், ரத்தக் கழிச்சல் வராது.

  • பஞ்சகவ்யா கரைசலைக் கொடுப்பதால் வயிற்றில் இருக்கிற கிருமிகள் அழிந்திடும்.

  • சின்ன வெங்காயத்தை விளக்கெண்ணெய் சேர்த்து கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

  • குஞ்சுகளுக்கு வைக்கிற தண்ணீர்ல வசம்பைக் கலந்துவிட்டாலும் நோய் எதிர்ப்புத் திறன் அதிகரிக்கும்.

  • குளிர்காலத்தில் தண்ணீர்ல அதிமதுரம் பொடியைக் கலந்து கொடுத்தால் சளிப் பிடிக்காது.

  • இந்த நாட்டு மருந்துகளை தொடர்ச்சியாய் கொடுத்து வந்தாலே கோழிகளுக்கு எந்தவொரு நோய்யும் வராது.

மருத்துவ குணநலன்கள்

மைசூரில் இருக்கும் கால்நடை மருத்துவ கழகம் மேற்கொண்ட கருங்கோழி இன இறைச்சி ஆராய்ச்சியில் அதிகப்படியான மருத்துவ குணம் உள்ளது என தெரிவித்துள்ளது. நரம்பு சம்பந்தமான நோய் உள்ளவர்களுக்கு இந்த இறைச்சி மிகவும் ஏற்றது எளிதாக குணமாக கூடியதும் கூட. கருங்கோழியின் முட்டையும் சிறந்த மருந்துப் பொருளாக உள்ளது. சளி மற்றும் இருமல் உள்ளவர்களுக்கு இந்த கோழி முட்டையை குடித்துவர குணமாகும். எலும்பு முறிவு மற்றும் எலும்பு சம்பந்தமான நோய்களுக்கு இந்த கோழியின் வெள்ளை கரு சிறந்த மருந்து பொருளாகவும் செயல்படுகிறது.

கோழித் தீவனத்தில் நச்சுத்தடுப்பு மருந்து சேர்ப்பது அவசியம்!

குழந்தைகளுக்கு இந்த முட்டையை சமைத்து தருவதன் மூலம் குழந்தைகள் நன்கு ஆரோக்கியத்துடன் இருப்பதுடன் வளர்சிதை மாற்றங்களிலும் உதவிபுரிகிறது. பெண்களுக்கான பிரச்சனைகள், ஆஸ்துமா, இரத்த கொதிப்பு ,இதய நோய் அனைத்து வியாதிகளுக்கும் மருந்தாக பயன்படுகிறது. இதன் முட்டைகள் தீராத தலைவலி நிவர்த்தியாகவும் பயன்படுகிறது.  

கருங்கோழி வணிக முறைகள்

கோழிப்பண்ணை அமைக்க விரும்புபவர்கள், 100 கடக்நாத் கோழிக் குஞ்சுகளை வாங்கி தொழில் தொடங்கினால், விற்பனை வாய்ப்புக்கு ஏற்றவாறு பன்மடங்கு லாபம் தரும்.
கருங்கோழி வளர்ப்பில் முட்டை விற்பனை, குஞ்சுகள் விற்பனை, வளர்ந்தக் கோழி இறைச்சி விற்பனை என்று மூன்று வகையில் வருமானம் ஈட்ட முடியும்.

100% மானியத்தில் செயல்படும் கால்நடை திட்டங்கள் - நீங்களும் பயன்பெறலாம்!!

முட்டை விற்பனை என்று எடுத்துக் கொண்டால் நூறு தாய்க்கோழிகளிடமிருந்து ஆண்டுக்கு தலா நூறு முட்டை என்ற கணக்கில் 10 ஆயிரம் முட்டைகள் கிடைக்கும். ஒரு கடக்நாத் முட்டையின் விலை 40 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. சுமார் பத்தாயிரம் முட்டைகளுக்கு 40 ரூபாய் வீதம் மொத்தம் ரூ 4 லட்சம் வருமானம் பார்க்கலாம்.
கருங்கோழிக் குஞ்சு விற்பனை என்றால், பத்தாயிரம் முட்டைகளையும் குஞ்சுகளாக வளர்க்கையில் நூறு சதவீதமும் குஞ்சுகள் கிடைக்க வாய்ப்பில்லை. ஆகவே, 75 சதவீதம் என்று வைத்துக் கொண்டாலும் 7 ஆயிரத்து 500 கோழிக்குஞ்சுகள் கிடைக்கும். ஒரு கருங்கோழிக்குஞ்சு 60 ரூபாய்க்கு விற்பனையாகிறது. எனில் 7,500 கோழிக்குஞ்சுகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ 4,50,000 வருமானம் ஈட்டலாம்.

இறைச்சிக்காக கோழி வளர்க்கையில் 7,500 கோழிக் குஞ்சுகளையும் வளர்க்கையில் அதில் 10 சதவீதம் கழிந்து 750 கோழிகள் இறந்தாலும் கூட 6,750 தாய்க் கோழிகளை நல்ல முறையில் வளர்த்து விற்பனைக்கு கொண்டு வரலாம். சராசரியாய் 6 ஆயிரம் கோழிகள் என்று வைத்து கொண்டாலும் ஒரு உயிர்க் கோழி 400 ரூபாய்க்கு விற்றாலும் 6 ஆயிரம் கோழிகளுக்கு ரூ 24 லட்சம் வருமானம் கிடைக்கும்.

 

வாடிக்கைளார்கள் இருந்தால் கல்லா கட்டுவது நிச்சயம்

ஆனால், கோழிப் பண்ணையாளர்கள் அவர்களுக்கான வாடிக்கைளாயர்களைத் தேடிக் கொள்ள வேண்டும். ஆண்டுக்கு 6 ஆயிரம் கோழிகளை விற்க வேண்டும் என்றால் மாதத்துக்கு 500 கோழிகளை விற்க வேண்டும். அப்படியானால், ஒரு பண்ணையாளர் மாதம் 500 கோழிகளை விற்பதற்கு 700 வாடிக்கையாளர்களையாவது கொண்டிருப்பது அவசியம். தமிழ்நாட்டிலும் கருங்கோழி இறைச்சிக்கான தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஆடு வளர்ப்பில் வருவாய் ஈட்ட சிறந்த வழி! முதலீடு செய்ய அழைப்பு!

English Summary: how to start kadaknath chicken farming to get profit

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.