மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 14 January, 2021 12:58 PM IST
Credit : Your Story

நெல்லை, தூத்துத்துகுடி, தென்காசி உள்ளிட்ட தென்தமிழக மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையால் ஏராளமான பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. அவைகளை உடனடியாக கணக்கிட்டு இழப்பீடுகள் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிவர் மற்றும் புரவி புயல்களால் ஏற்பட்ட கனமழை காரணமாக வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் 3.10 லட்சம் ஹெக்டேர் அளவில் பாதிக்கப்பட்டன.

அதிக மழையால் விவசாயிகள் பாதிப்பு

இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டதை கருத்தில் கொண்டு, கடந்த 2.1.2021 அன்று மாநில பேரிடர் நிவாரண விதிமுறையின்கீழ் வழங்கப்படும் நிவாரணத்தொகைக்கும் அதிகமான தொகையை அரசு நிர்ணயித்து, ரூபாய் 565.46 கோடியை அறிவித்தது. இந்நிவாரணத்தில், இதுவரை 487 கோடி ரூபாய் சம்மந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை, விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

மேலும், நடப்பு ஜனவரி மாதத்தில் இதுவரை பெய்ய வேண்டிய இயல்பான மழை அளவான 10.2 மில்லிமீட்டருக்கு இதுவரை மிக அதிகமாக 108.7 மில்லிமீட்டர் வரை பெய்துள்ளது. இதனால், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்களும், விவசாயிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சர்களின் கண்காணிப்பில் தென் மாவட்டங்கள்

பாதிக்கப்பட்ட பொதுமக்களை தாழ்வான பகுதிகளில் இருந்து மீட்டு, பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து, அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் இதர உதவிகளை செய்து தர மாவட்ட ஆட்சியர்களுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தற்போது மழை அதிகமாக உள்ள காரணத்தால், வருவாய்த்துறை அமைச்சர் அவர்களையும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அவர்களையும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அவர்களையும், இம்மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்திட கேட்டுக் கொண்டுள்ளேன்.

பயிர் சேத கணக்கெடுப்பு தீவிரம்

அறுவடை நிலையில் இருந்த நெற்பயிர்களும், இதர பயிர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட வயல்களில் போர்க்கால அடிப்படையில், கணக்கெடுப்புப் பணியினை மேற்கொள்வதற்கு வேளாண் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். எனவே, மழையினால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீட்டுத் தொகையை விரைவில் வழங்க எனது தலைமையிலான அம்மாவின் அரசு நடவடிக்கை எடுக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க

சுப்ரீம் கோர்ட் அதிரடி! வேளாண் சட்டங்களை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தாவிட்டால், நாங்கள் செய்வோம்!

பொங்கல் பரிசு இன்னும் வாங்கவில்லையா? கவலைப்படாதீங்க! கால அவகாசம் நீட்டிப்பு!

வீடு கட்டுவோர்க்கு கூடுதல் உதவித் தொகை! தமிழக அரசு அறிவிப்பு!

வைப்பு நிதி முதலீட்டில் வட்டி குறைவு! நீண்ட கால முதலீட்டில் கவனம் செலுத்தும் நேரமிது!

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு இலவச Wi-Fi வசதி! டெல்லி முதல்வர் அசத்தல்!

English Summary: due to heavy rainfall Crop damage will be surveyed in the southern districts of Tamil Nadu - Chief Minister Edappadi Palanisamy
Published on: 14 January 2021, 12:58 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now