Krishi Jagran Tamil
Menu Close Menu

வீடு கட்டுவோர்க்கு கூடுதல் உதவித் தொகை! தமிழக அரசு அறிவிப்பு!

Tuesday, 12 January 2021 06:25 PM , by: KJ Staff

Credit : IIFL

பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டத்தின் கீழ், வீடு கட்டும் பயனாளிகளுக்கு, தமிழக அரசு கூடுதலாக அறிவித்துள்ள, 70 ஆயிரம் ரூபாயை, நான்கு கட்டமாக பிரித்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டத்தின் கீழ், ஒரு வீட்டிற்கு, 1.20 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதில், மத்திய அரசின் பங்குத் தொகை, 72 ஆயிரம் ரூபாய்; மாநில அரசின் பங்குத் தொகை, 48 ஆயிரம் ரூபாய். இத்தொகையுடன் கூடுதலாக, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட ஊதியத்தின் அடிப்படையில், 23 ஆயிரத்து, 40 ரூபாய்; தனி நபர் இல்ல கழிப்பறை கட்டும் பணிக்கு, 12 ஆயிரம் ரூபாய் என, ஒருங்கிணைத்து வழங்கப்படுகிறது.

வீடுகட்ட உதவித்தொகை உயர்வு:

கட்டுமான பொருட்கள் விலையேற்றம், கொரோனாவால் (Corona) வாழ்வாதாரம் பாதிப்பு போன்ற காரணங்களால், ஏற்கனவே மேற்கூரை அமைக்க தமிழக அரசால் வழங்கப்படும், 50 ஆயிரம் ரூபாய், 1.20 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என, கடந்த மாதம் முதல்வர் அறிவித்தார். இதன் காரணமாக, ஒரு வீட்டிற்கு வழங்கப்படும் தொகை, 1.70 லட்சம் ரூபாயிலிருந்து, 2.40 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. அத்துடன் ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும், 23 ஆயிரம் ரூபாய்; தனி நபர் கழிப்பறை கட்ட, 12 ஆயிரம் ரூபாய் சேர்த்து, 2.75 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.

முதல்வர் அறிவித்த கூடுதல் தொகையை, நான்கு கட்டமாக பிரித்து வழங்க, அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, அஸ்திவாரத்தின் போது, 15 ஆயிரம் ரூபாய்; லிண்டல் மட்டம் வந்ததும், 15 ஆயிரம்; மேற்கூரை (Floor) அமைக்கும் போது, 25 ஆயிரம்; இறுதி தொகை வழங்கும் போது, 15 ஆயிரம் ரூபாய் என, நான்கு கட்டமாக வழங்கும்படி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், ஊரக வளர்ச்சி துறை கமிஷனர் பழனிசாமி (Palanisamy) எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

தோட்டக்கலை துறை விவசாயிகளுக்கு 35 கோடி ரூபாய் நிவாரணம் அளிக்கப்பட்டது!

சுப்ரீம் கோர்ட் அதிரடி! வேளாண் சட்டங்களை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தாவிட்டால், நாங்கள் செய்வோம்!

தமிழக அரசு அறிவிப்பு கூடுதல் உதவித் தொகை! வீடு கட்டுவோர் home builders Extra subsidy
English Summary: Extra subsidy for home builders! Tamil Nadu government announcement!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Latest Stories

  1. மரச்செக்கு எண்ணெய்த் தயாரிப்பில் அசத்தல் லாபம் பெரும் விவசாயி செல்வம்!
  2. சுற்றுச்சூழலை பாதுகாத்து, பயிர்களில் பூச்சிகளை விரட்டும் விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு!
  3. புதிய வேளாண் சட்டத்தால் விவசாயிகளின் வருவாய் உயரும் - சர்வதேச நிதியம் கருத்து!
  4. Budget 2021 Mobile App : பட்ஜெட் தொடர்பான அனைத்து விவரங்களும் உங்கள் கைகளில்!
  5. வாழை பயிரில் கூட்டு ஆராய்ச்சி : வேளாண் பல்கலை நைஜீரியா நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!!
  6. வேளாண் பல்கலைக்கழத்தில் 21 காலிப் பணியிடங்கள்! - உடனே விண்ணப்பிக்க... முழு விபரம் உள்ளே!!
  7. வெள்ளத்திலும் தாக்குப்பிடித்த மாப்பிள்ளை சம்பா! இயற்கை விவசாயிக்கு குவியும் பாராட்டு!
  8. டிராக்டர் பேரணியில் வன்முறை! போராட்டத்தில் இரு விவசாய சங்கங்கள் வாபஸ்!
  9. நாமக்கல் மாவட்டத்தில் இலவச கால்நடை மருத்துவ முகாம்!
  10. கால்நடைக்கு தீவிரமாய் பரவும் அம்மை நோய்! போர்க்கால நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.