தமிழகத்தில் ரேஷன் கடைகளில் இ சேவை மையத்தின் அனைத்து சேவைகளும் பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆய்வுகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கான பணிகள் நடந்து சோதனை முயற்சியாக நடந்து வருகின்றன.
இ-சேவை மையங்கள் (e-seva centers)
தமிழக அரசு ரேஷன் கடைகளின் மூலமாக தான் அனைத்து வித மக்களுக்கான நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. மேலும் கூட்டுறவு துறையின் வருமானத்தை அதிகரிக்கும் விதமாக ரேஷன் கடைகளில் அரசு வைபை குறைந்த செலவில் மக்களுக்கு அளிக்கும் திட்டம் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கிராமப்புறங்களில் உள்ள ரேஷன் கடைகளில் இ சேவை மையங்களில் வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் தொடங்குவதற்கான ஆலோசனை நடந்து வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் மக்கள் இ சேவை மையங்களில் மேற்கொள்ளும் அனைத்துவித செயல்பாடுகளையும் ரேஷன் கடைகளிலேயே செய்து கொள்ளலாம். இதன் மூலம் அரசுக்கு கூடுதலான வருவாய் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
சோதனை முயற்சி
முதல் கட்டமாக இந்த திட்டம் திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக ரேஷன் கடைகளின் இருப்பிடம் குறித்து ஆய்வுகள் நடந்து வருகிறது.
மேலும் படிக்க