துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 530 ஆக உயர்ந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. சடலங்களை கண்டு துருக்கி மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் 530 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நிலநடுக்கத்தின் காரணமாக பல கட்டிடங்கள் இடிந்துள்ளன, இடிந்த கட்டடங்களுக்கு இடையே மாட்டிக்கொண்டவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. துருக்கிக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
துருக்கி நாட்டின் நர்டஹி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியின் நேரப்படி காலை 3.20 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. துருக்கி - சிரியா எல்லை அருகே உள்ள பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. லெபனான், ஜோர்டான், பிரிட்டன், ஈராக் உள்ளிட்ட நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்ட வீடியோ சமூக வலைதரங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோவில் இடிந்த கட்டிடங்கள், தெருக்களில் தஞ்சம் புகுந்த மக்கள் பெரும் வேதனை ஏற்படுத்த கூடிய காட்சிகள் உள்ளன. அதிக அளவிலான கட்டிடங்கள் இடிந்துள்ளதால், பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
இருநாடுகளிலும் பல கட்டிடங்கள் தரைமட்டாகியுள்ளது. பலி எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இடிந்த கட்டிடங்களுக்கு இடையே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
நிலநடுக்கம் ஏற்பட்டத்தில் இருந்து சரியாக 15 நிமிடங்கள் இடைவெளியில் இன்னொரு சக்திவாய்ந்த நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது. அது 6.7 ரிக்டர் என்றளவில் இருந்தது. அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் பலரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளார். இதனால் துக்கத்தில் இருந்த பலரும் உயிரிழந்திருக்கக்கூடும் என கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தில் கட்டிடத்தின் இடிந்த பகுதிகளில் களில் சிக்கி உயிரிழந்த 530க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் தற்போதுவரை மீட்கப்பட்டுள்ளது.
அதிகாலை நேரத்தில் மக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியே ஓடிவரும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வஐகின்றன. காசியான்டேப் நகரம் சிரியா எல்லையை ஒட்டியுள்ள நகரமாகும். தொழில் நகரமாக இது அறியப்படுகிறது. இந்த நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் அருகிலிருக்கும் லெபனான், சைப்ரஸ், சிரியா நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது. இதில் சிரியாவில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருநாடுகளிலும் இதுவரை 550 பேர் உயிரிழந்ததாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கிக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளர். மற்றும் பல பிரபலங்களும் தலைவர்களும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க
மின் கட்டணம் நிச்சயம் குறையும் - செந்தில் பாலாஜி
33% பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 20,000 இழப்பீடு முதல்வர் அறிவிப்பு