கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணமாக, தமிழகத்தில் உப்பு உற்பத்தி மீண்டும் துவங்கியுள்ளது.
உப்பு உற்பத்தி நிறுத்தம் (Salt production stop)
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி உள்ளிட்ட பகுதிகளில்,உப்பு உற்பத்தி துவங்கியுள்ளது. இருப்பினும் மழை மற்றும் பலத்தக் காற்று காரணமாக, கடந்தாண்டு நவம்பர், டிசம்பர் மற்றும் நடப்பாண்டு ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் உப்பு உற்பத்தி தடைபட்டிருந்தது.
5 மாதங்களுக்குப் பிறகு (After 5 months)
இந்நிலையில், கடந்த 5 மாதங்களுக்கு பிறகு ஏப்ரல் முதல் வாரம் முதல் தீவிரமாக உப்பு வாரும் பணி துவங்கியுள்ளது.
கடந்த நவம்பர் முதல் ஜனவரி வரை பெய்த கன மழையால் பல பகுதிகளில் பெருமளவு வெள்ளநீர் புகுந்தது.
இதன் காரணமாக உப்பு தொழில் பாதிப்புக்குள்ளாகி இருந்தது. இதனால், உப்பளத் தொழிலாளர்கள் பாத்திகளில் இருந்தக் கழிவுகளை அகற்றி செம்மைப்படுத்தி தயாராக வைத்திருந்தனர். உப்பள பாத்திகள் முறையாக சீரமைக்கப்பட்டு ஆழ்துளைக் கிணறுகளின் மூலமாக உவர்நீர் பாய்ச்சப்படுகிறது.
உப்பு உற்பத்தி மீண்டும் துவக்கம் (Salt production resumes)
கடந்த 20 நாட்களாகத் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்ததன் காரணமாக, உப்பு பாத்திகளில் சேகரிக்கப்பட்ட நீரில் உப்பு விளைந்து வருகிறது. இதனை, அதிகாலை முதல் காலை 9 மணி வரையிலும் மீண்டும் மாலை 4 முதல் 7 மணி
வாரிக் குவிக்கத் துவங்கியுள்ளனர்.
மீண்டும் வேலைவாய்ப்பு (Re-employment)
இதன் மூலம் பல ஆயிரம் தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.
திருப்புல்லாணி, காஞ்சிரங்குடி, உப்பள ஆனைகுடி மற்றும் அரசின் உப்பு நிறுவனம் வாலிநோக்கம் வரையிலும் பெருமளவு உப்பு உற்பத்தி தொடங்கியுள்ளது.
இங்கு உருவாகும் உப்பு தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு உணவுக்காகவும், ரசாயனத் தொழிற்சாலைகளுக்கும் கொண்டு செல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
கோரை சாகுபடி தீவிரம்! விவசாயிகள் வாழ்வாதாரத்தை காக்க கோரைப்பாயை பயன்படுத்துவோம்!
ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ரூ.41¼ லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம்!
இயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்க பயிற்சி!