நாமக்கல மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை சரிந்துள்ளது. இதனால் முட்டைப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த நாட்களில் உயர்ந்து வந்த முட்டையின் விலையில் இப்போது சரிவு காணத் தொடங்கியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம்.
ஆடி மாத பண்டிகைகள் துவக்கம், வட மாநிலங்களில் விற்பனை சரிவு முதலான காரணங்களால் விற்பனைக்காக வைக்கப்பட்ட முட்டைகள் தேக்கம் ஏற்பட்டதால் விலை குறைக்கப்பட்டுள்ளதாக நாமக்கல் முட்டை பண்ணையாளர்கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளில் இருந்து 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ஆடு வளர்க்க 90% மானியம்! விண்ணப்பித்துப் பயனடையுங்க!!
கடந்த ஜூலை 9-ஆம் தேதிகளில் முட்டைகளின் பண்ணை கொள்முதல் விலையானது 5 ரூபாய் 50 காசுகளாக இருந்த நிலையில், விலை படிப்படியாகக் குறைந்து இன்று 4 ரூபாய் 40 காசுகளாகக் கொள்முதல் செய்யப்படுகின்றன.
கடந்த ஒரு வாரத்தில் முட்டையின் விலை 1 ரூபாய் 10 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது என்பது நோக்கத்தக்கது. ஆடி மாதத்தினை ஒட்டித் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கோவில் பண்டிகை, திருவிழாக்கள் நடைபெறுவதால் முட்டைகளின் கொள்முதலில் தேக்கம் ஏற்பட்டுள்ளது எனவும், இதனால் விலை குறைக்கப்பட்டுள்ளது என்றும் கோழிப் பண்ணையாளர்கள் கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர்.
இதே நிலைதான் ஆடி மாதம் நிறைவடையும் வரை இருக்கும் என்றும் அல்லது இன்னும் முட்டையின் விலையில் வீழ்ச்சி ஏற்படும் என்றும் கூறப்படுகின்றது.
மேலும் படிக்க
பள்ளி மாணவர்களுக்கு ரூ. 6000 ஊக்கத்தொகை! விவரம் உள்ளே!!
7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு இரட்டை மகிழ்ச்சி! குவியும் சலுகைகள்!!