வேலைவாய்ப்பு திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில், கல்வி, வயதுக்கான விதிகளை தளர்வு செய்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் நிதியின் கீழ், 2011 முதல் வேலைவாய்ப்புகள் உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாற்றுத்திறனாளிகள் (Disabled Persons)
வேலை வாய்ப்புத் திட்டத்தில் பயன் பெற பொதுப் பிரிவினருக்கு, 18 - -35 வரையும்; மாற்றுத் திறனாளிகள், பட்டியலினத்தவர், பெண்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினருக்கு அதிகபட்சமாக, 45 வரையும் வயது இருக்க வேண்டும். எட்டாம் வகுப்பு கல்வித் தகுதியும், ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கு மிகாமலும் இருக்க வேண்டும் என விதிகள் உள்ளன.
இந்நிலையில், தமிழக தொழில் வர்த்தகத் துறை கமிஷனர் தலைமையில், மே மாதம் மாநில, மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகள் சங்க பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் வேலைவாய்ப்பு திட்ட விதிகளில் இருந்து, மாற்றுத் திறனாளிகளுக்கு தளர்வு ஏற்படுத்த கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகபட்சமாக, 55 வயது வரை என உயர்த்தியும், எட்டாம் வகுப்பு கல்வித் தகுதி இருக்க வேண்டும் என்ற விதியை நீக்கியும், தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த புதிய அரசாணையை, மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கத்தினர் வரவேற்றுள்ளனர்.
மேலும் படிக்க
தேயிலைத் தோட்ட பணியாளர்களுக்கு குட் நியூஸ்: தமிழக அரசு அறிவிப்பு!