1. செய்திகள்

தேயிலைத் தோட்ட பணியாளர்களுக்கு குட் நியூஸ்: தமிழக அரசு அறிவிப்பு!

R. Balakrishnan
R. Balakrishnan
Tantea Workers

தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 1.10.2017 முதல் வழங்கப்படாமல் இருந்த பணிக் கொடை பலன்கள் வழங்கிட ரூ. 29.38 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகத் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

பணிக்கொடை (Gratuity)

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று ( ஆகஸ்ட் 29) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத்தில் (டேன்டீ) பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த 1.10.2017 முதல் வழங்கப்படாமல் இருந்த பணிக் கொடை பலன்கள் மற்றும் இதர பலன்கள் அளிப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், டேன்டீ கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள ஓய்வுகால பயன்களை வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த 1.10.2017 முதல் பணிக் கொடை, முனைய விடுப்பு ஊதியம் மற்றும் இதர சட்டப்படி வழங்கப்பட வேண்டிய பயன்களான விடுப்புடன் கூடிய ஊதியம், மருத்துவ ஊதியம் வழங்க தேவையான 29.38 கோடி ரூபாயை விடுவிக்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

இத்தொகையினை வழங்குவதன் மூலம் 1066 ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் 101 ஓய்வு பெற்ற ஊழியர்கள் பயன் பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், தற்பொழுது பணிபுரிந்து வரும் 3820 நிரந்தர தொழிலாளர்களும் மற்றும் 212 ஊழியர்களும் பயன்பெறுவார்கள். ஓய்வு பெற்றபின் பயனாளிகள் பங்களிப்பை அளிக்கத் தயாராக இருக்கும் பணியாளர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளை முன்னுரிமை அடிப்படையில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் தமிழக முதல்வர் உறுதியளித்துள்ளார்.

மேலும் படிக்க

இன்சுலினை இயற்கையாக சுரக்க வைக்கும் உணவுகள்!

ஈஷா விவசாய கருத்தரங்கம்: இயற்கையையும், நம் ஆரோக்கியத்தையும் காக்க இயற்கை விவசாயமே தீர்வு!

English Summary: Good news for tea plantation workers: Tamil Nadu government announcement! Published on: 30 August 2022, 02:37 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.