மகாராஷ்டிராவில் ஏ.டி.எம்., மெஷினை வெடிவைத்துத் தகர்த்து, அதிலிருந்த ரூ.16 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதிரடி முடிவு (Action results)
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் சக்கான் என்ற பகுதியில் தொழிற்பேட்டை உள்ளது. இங்கு தனியார் வங்கிக்குச் சொந்தமான ஏ.டி.எம்., மையம் உள்ளது. ஏடிஎம் மையத்திற்குள் நள்ளிரவில் புகுந்தக் கொள்ளையர்கள் சிலர் வழக்கம்போல் கைவரிசை காட்டி பணம் எடுக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. பின்னர் மிஷனை உடைக்க முயற்சித்துள்ளனர். அதுவும் கைகொடுக்காததால், ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் அதிரடி முடிவுக்கு வந்தனர்.
வெடி வைத்து தகர்ப்பு (Bomb blast)
அதுதான் ATM இயந்திரத்தை வெடிவைத்துத் தகர்ப்பது. பின்னர் திட்டமிட்டபடி அந்த ATM இயந்திரத்தை வெடி வைத்து தகர்த்து அதில் வைக்கப்பட்டிருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து, கொள்ளையர்களின் கைரேகை உடைக்கப்பட்ட இயந்திரத்தின் பாகங்களை சேகரித்து விசாரணை நடத்தினர்.
சிசிடிவி காட்சிகள் (CCTV footage)
ஏ.டி.எம்.,மிஷின் அறையில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி காமிரா உள்பட அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமிராக் காட்சிகளை வைத்துக் கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை ஆணையர் கூறுகையில், ஏ.டி.எம்.,கொள்ளை சம்பவத்தில் மூன்று பேர் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். இயந்திரத்தில் சுமார் ரூ. 16 லட்சம் ரொக்க பணம் வைக்கப்பட்டிருந்தது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
வித்தியாசமானக் கொள்ளை (Strange robbery)
பைக் திருட்டு, சாமி சிலைகள் திருட்டு, கோயில் நகைகள் கொள்ளை என விதவிதமானக் கொள்ளைகளைக் கேள்விட்டுள்ள நமக்கு இந்த சற்று வித்தியாசமானக் கொள்ளை. அவ்வளவுதான்.
மேலும் படிக்க...