1. செய்திகள்

Flipkart: 26,999 ரூபாய் போபைல் வெறும் ரூ.5,000த்திற்கு!

Deiva Bindhiya
Deiva Bindhiya
Flipkart: Rs 26,999 mobile for just Rs 5,000!

பிளிப்கார்ட்டில் (Flipkart) ஸ்மார்ட்போன்களுக்கான ஆண்டு இறுதி விற்பனை (Year End Sale) நடந்து வருகிறது. சமீபத்தில் சந்தைக்கு வந்த ஸ்மார்ட்போன்களை, பிளிப்கார்ட்டின் இந்த விற்பனையில் மிகவும் மலிவாக வாங்க முடியும். இந்த விற்பனை டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 30 ஆம் தேதி வரை நடைபெறும். இந்த விற்பனையின் போது Apple, Samsung, Oppo, Xiaomi மற்றும் Realme போன்ற பல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை மிக மலிவாக வாங்கலாம். விற்பனையின் போது, ​​Realme இன் மிகவும் பிரபலமான Smartphone Realme GT Master Edition மிகப்பெரிய தள்ளுபடியைப் தருகிறது. சலுகைகளைப் பயன்படுத்திக் கொண்டால், வெறும் 5,449 ரூபாய்க்கு Realme GT Master Edition போனை வாங்கலாம். எப்படி என்று வாருங்கள் பார்க்கலாம்.

Flipkart Year End Sale: Realme GT Master Edition Offers And Discounts

Realme GT Master Edition GB RAM + 128 GB ஸ்டோரேஜ்  மாறுபாட்டின் சந்தையின் விலை ரூ.26,999 ஆகும். ஆனால் பிளிப்கார்ட் விற்பனையில் ரூ.25,999க்கு கிடைக்கும். அதாவது பிளிப்கார்ட் ஆயிரம் ரூபாய் போன்களுக்கு, தள்ளுபடி வழங்குகிறது. அதன் பிறகு வங்கிச் சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் உள்ளன, இவை போனின் விலையை மேலும் குறைக்கிறது.

Realme GT Master Edition இல் வங்கி சலுகைகள்

இந்த போபைலை தேர்ந்தெடுத்து வாங்கும் போது, கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், ரூ.4,000 தள்ளுபடி பெறலாம். (Axis Bank) ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், உடனடித் தள்ளுபடியாக ரூ.1,100 குறையும். அதாவது, போனின் விலை நேரடியாக ரூ.20,899 ஆக கிடைக்கும். இந்த போனிற்கு எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் உண்டு. இது போனின் விலையை மேலும் குறைக்கிறது.

Realme GT Master Edition இல் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்

Realme GT Master Edition இல் ரூ.15,450 எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உள்ளது. உங்கள் பழைய ஸ்மார்ட்ஃபோனை மாற்றிக் கொண்வது மூலம், நீங்கள் இந்த தள்ளுபடி பெறலாம். பழைய போனின் நிலை நன்றாகவும், லேட்டஸ்ட் மாடலாகவும் இருந்தால் மட்டுமே எக்ஸ்சேஞ்ச்-இல் ரூ.15,450 கிடைக்கும். இவ்வளவு சலுகைகளுக்கு பின், இந்த போனின் விலை ரூ.5,449க்கு , நீங்கள் வாங்க முடியும். எனவே இந்த ஆஃபரில் போபைல் வாங்கினால் குறைந்த விலையில் நல்ல போபைல் பெறலாம்.

மேலும் படிக்க:

குளிர்காலத்தில் செய்ய 5 அயுர்வேத டிப்ஸ்!

பூச்சிகளை உண்ணும் தாவரம்- நேரில் பார்க்க அரிய வாய்ப்பு!

English Summary: Flipkart: Rs 26,999 mobile for just Rs 5,000! Published on: 27 December 2021, 05:11 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.