News

Tuesday, 03 January 2023 04:14 PM , by: Poonguzhali R

Extension of free food grain program of central government!

இலவச உணவு தானிய திட்டம் ஓராண்டு நீட்டிக்கப்பட்டு நாடு முழுவதும் அமலுக்கு வந்துவிட்டது. கடந்த செப்டம்பரில் இத்திட்டத்தை டிசம்பர் 31 வரை 3 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்தது. அதைத் தொடர்ந்து இன்று முதல் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் கடந்த 2020 ஏப்ரல் மாதம் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தினை மத்திய அரசு அமல்படுத்தி இருந்தது. இந்த திட்டத்தின்படி ஏழை குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ரேஷனில் தலா 5 கிலோ கோதுமை அல்லது அரிசி இலவசமாக வழங்கப்படுகின்றது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்த திட்டத்தினை டிசம்பர் 31 வரை 3 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்தது. இதற்கிடையே, பிரதமர் மோடி தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், கரீப் கல்யாண் அன்ன யோஜனா என்ற இலவச உணவு தானியத் திட்டத்தினை அடுத்தாண்டு டிசம்பர் வரை நீட்டிக்க ஒப்புதல் வழங்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், முன்னரே அறிவிக்கப்பட்ட நீடிப்பு டிசம்பர் 31-ம் தேதி முடிவடைந்து, நேற்று முதல் புதிய நீடிப்பு அமலுக்கு வந்தது. இதுதொடர்பாக, மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சக அதிகாரிகள் தெரிவிக்கையில், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் அரிசி, கோதுமை தானியங்கள் தகுதியான பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் எனக் கூறப்பட்டது.

தொடர்ந்து வெளிவந்த அறிவிப்புகளைத் தொடர்ந்து ஜனவரி 1, 2023 முதல் டிசம்பர் 31, 2023 வரை இந்த திட்டம் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

அதிரடியாக உயரும் தங்கம் விலை! இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!

மத்திய அரசின் இலவச உணவு தானிய திட்டம் கால நீட்டிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)