தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி தமிழ்நாட்டில் உள்ள வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புதாரர்கள் தங்களது மின் இணைப்பு எண்ணினை ஆதாருடன் இணைப்பது சம்பந்தமாக நேற்று (பிப்ரவரி 15) பேசுகையில் கீழ்க்கண்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.
மின்சாரம் - ஆதார் இணைப்பு
தமிழ்நாட்டில் உள்ள வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புதாரர்கள் மின் இணைப்பு எண்ணை அவர்களது ஆதாருடன் இணைக்கும் பணியானது மத்திய அரசின் ஒப்புதலுடன் தமிழக அரசின் மின் ஆளுமை முகமையின் அனுமதி பெற்று தமிழ்நாட்டில் உள்ள வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புதாரர்களின் மின் இணைப்பு எண்ணை அவர்களது ஆதாருடன் இணைக்கும் பணியானது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் 15.11.2022 முதல் ஆன்லைன் மூலமாகவும், 28.11.2022 முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 2,811 பிரிவு அலுவலகங்களிலும் சிறப்பு கவுண்டர்கள் மூலமாகவும் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணிகள் துவக்கி வைக்கப்பட்டன.
இந்தப் பணிகளை முடிப்பதற்கு முதற்கட்டமாக 31.12.2022 வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தக் காலக்கெடுவானது 31.01.2023 வரை நீட்டிக்கப்பட்டது. 2023 ஜனவரி மாதத்தில் தைப்பொங்கல் உள்ளிட்ட விடுமுறை நாட்கள் அதிகம் இருந்ததால், 15.02.2023 வரை மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கு இறுதியாக காலநீட்டிப்பு செய்யப்பட்டது.
இதுவரை தமிழ்நாட்டில் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைத்த மின் இணைப்புகளின் விவரம்:
- வீட்டு மின் இணைப்புகள் : 227.58 லட்சம் (97.72%)
- கைத்தறி மின் இணைப்புகள் : 0.73 லட்சம் (98.66%)
- விசைத்தறி மின் இணைப்புகள்: 1.60 லட்சம் (98.42%)
- குடிசை மின் இணைப்புகள் : 8.42 லட்சம் (91.05%)
- விவசாய மின் இணைப்புகள் : 22.25 லட்சம் (95.57%)
- மொத்தம் : 260.58 லட்சம்
மீதமுள்ள பொதுமக்களும் தங்களது ஆதார் எண்களை மின் இணைப்பு எண்ணுடன் இணைப்பதற்காக வருகின்ற 28.02.2023 வரை காலக்கெடு இறுதியாக நீட்டிக்கப்படுகிறது.
பொதுமக்கள் அனைவரும் இந்த கால நீட்டிப்பு அவகாசத்தை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு மின்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு: எவ்வளவு தெரியுமா?
குரூப் 4 தேர்வு முடிவுகள்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த TNPSC!