1. செய்திகள்

குரூப் 4 தேர்வு முடிவுகள்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த TNPSC!

R. Balakrishnan
R. Balakrishnan
TNPSC Group 4 exam

7,301 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு முடிந்து, ஏழு மாதங்கள் கடந்த நிலையில், இதுவரை தேர்வு முடிவுகள் வெளியாகாததற்கான காரணத்தை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission) வெளியிட்டுள்ளது.

குரூப் 4 தேர்வு முடிவுகள் (Group 4 exam results)

தேசிய அளவில் மிக அதிகமான விண்ணப்பதாரர்களைக் கொண்டு நடத்தப்பட்ட தேர்வுகளில் ஒன்றாக குரூப் 4 தேர்வு உள்ளது. கடந்த 2014 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் சுமார் 10 முதல் 17.5 லட்சம் தேர்வர்கள் பங்கேற்ற நிலையில், 2022ல் நடைபெற்ற தேர்வில் ஏறத்தாழ 18 லட்சத்திற்கும் கூடுதலான தேர்வர்கள் பங்கேற்றதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துளளது.

மேலும், தேர்வு தொடர்பான நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்த டிஎன்பிஎஸ்சி, " தேர்வுகளில் இரு பகுதிகளைக் கொண்ட ஒருங்கிணைந்த விடைத்தாள் முறை (integrated - two part OMR answer sheets) கொண்டுவரப்பட்ட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, விடைத்தாட்களின் இரு பகுதிகளையும் தனித்தனியே இருமுறை ஸ்கேன் செய்ய வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த புதிய தேர்வு முறையினால், மொத்தமாக ஸ்கேன் செய்ய வேண்டிய OMR விடைத்தாட்களின் எண்ணிக்கை 36 லட்சத்திறகும் கூடுதலாக உள்ளதாகவும், கடந்த கால தேர்வுகளை ஒப்பிடும்போது கூடுதலான வேலை மும்மடங்கு அதிகமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மார்ச் மாதம் வெளியீடு

விண்ணப்பதாரர்கள் விடைத்தாட்களில் செய்துள்ள பிழைகளை கணினி மூலம் அடையாளங் காணப்பட்டு, அவற்றை அலுவலர்கள் மூலம் நேரடி சரிபார்ப்பு மூலம் உறுதிசெய்யும் பணிகளுக்கு அதிகப்படியான கால அவகாசம் தேவைப்படுகிறது. விடைத்தாள்களில் தேர்வாணைய அறிவுரைகளை மீறி தேர்வர்களால் செய்யப்படும். ஏறக்குறைய 16 விதமான பிழைகளை சரிபார்க்க வேண்டியுள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. எனவே, எவ்வித தவறுக்கும் இடம் தராமல் இத்தேர்வு முடிவுகள் வரும் மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

PF கணக்கை மாற்றும் வழிமுறைகள்: தெரிந்து கொள்ளுங்கள்!

தமிழ்நாட்டில் இவர்களுக்கு மட்டும் பழைய பென்சன் திட்டம்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

English Summary: Group 4 Exam Results: TNPSC puts an end to rumours! Published on: 15 February 2023, 10:34 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.