தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறக்கும் நிலையில் 1,450 பேருந்துகள் சென்னையிலிருந்து கூடுதலாக இயக்கப்படுகின்றன. நீண்ட தொலைவு பயணம் செய்வோரின் வசதிக்காகத் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் இத்தகைய முடிவை எடுத்துள்ளது.
தமிழகத்தில் புதிய கோவிட்-19 வழக்குகள்: 200ஐ தாண்டிய அபாயம்!
தமிழகத்தில் கடந்த ஆண்டுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாகப் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகக் கல்வி கற்கும் சூழல் உருவானது. இதையடுத்து விதிக்கப்பட்ட தீவிர கட்டுப்பாடுகள் மூலம் நிலைமை சீரடைந்து நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. ஆனால் காலதாமதமாகப் பள்ளிகள் திறக்கப்பட்டதால் ஆண்டு இறுதித்தேர்வு மற்றும் கோடை விடுமுறை காலம் தள்ளிப் போனது.
கோவையில் இன்று மெகா கோவிட் தடுப்பூசி முகாம்!
இதனால் நடப்புக் கல்வியாண்டில் பள்ளிகள் திறப்பும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் ஜூன் 13ஆம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்தார். இந்நிலையில் போக்குவரத்து நெரிசலைத் தடுக்கும் வகையில் சென்னையிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
உச்சம் தொடும் கொரோனோ தொற்று: தமிழகத்தில் 1 லட்சம் கொரோனோ தடுப்பூசி முகாம்கள்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தீபாவளி, பொங்கல் முதலான பண்டிகைக் காலங்களிலும், பொதுவான அரசு விடுமுறை காலங்களிலும் இது மாதிரியான கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதே போல, நாளை பள்ளித் திறப்பை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
பெண்களுக்கு ரூ. 6000 கிடைக்கும் மத்திய அரசின் திட்டம்: இன்றே அப்ளை பண்ணுங்க!
மேலும், பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்பட்சத்தில் அதற்கு ஏற்ற வகையில் கூடுதலாகப் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
மேலும் படிக்க