News

Friday, 22 July 2022 03:32 PM , by: Poonguzhali R

Fall in the price of flowers!


தூத்துக்குடி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை குறைந்துள்ளது. ஆடி மாதத்தினை ஒட்டி இவ்விலை சரிவு நிகழ்ந்துள்ளது என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.

தூத்துக்குடி பூக்களின் சந்தைக்கு பேரூரணி, தெய்வசெயல்புரம், ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் மதுரை, ஊட்டி முதலான இடங்களில் இருந்தும் பூக்கள் அனைத்தும் விற்பனைக்காகக் கொண்டுவரப்படுகின்றன. இந்நிலையில் ஆடிமாதம் பிறப்பை முன்னிட்டு சுப முகூர்த்தத் தினங்கள் இருப்பதால் தூத்துக்குடி பூ சந்தையில் பூக்களின் விலை குறைந்திருக்கிறது.

மேலும் படிக்க: விவசாயிகளுக்கு ரூ. 8000 ஊக்கத்தொகை! இன்றே விண்ணப்பியுங்க!!

மல்லிகைப்பூ கிலோ 400 ரூபாய் எனவும், பிச்சிப்பூ கிலோ 600 ரூபாய் எனவும் விற்பனை செய்யப்பட்டு வருவதாகப் பூ வியாபாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். பூக்களின் விலை குறைவாக இருப்பதால் பெண்கள் மிகுந்த ஆர்வத்துடன் பூக்களை வாங்கிச் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: 7th Pay Commission: அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு! பெரிய ஏற்றம்!!

எனினும் விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் வருவாய் சற்று குறைந்துள்ளது எனக் கூறலாம். விற்பனை அதிகமாக இருந்தாலும் விலை குறைவு என்பதால் போதிய அளவில் லாபம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

தூத்துக்குடி மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த சீசனில் பூக்களின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில், மல்லிகைப்பூ மொத்த விலையில் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: குடும்பக் கட்டுபாடு சிகிச்சை இழப்பீடு ரூ. 4 லட்சமாக உயர்வு!

அதேபோன்று, முல்லைப்பூ 760 ரூபாய் முதல் 840 ரூபாய் வரையிலும், ஜாதிமல்லி 650 ரூபாய் முதல் 750 ரூபாய் வரையிலும் விற்பனையாகிறது. சிறிய பூக்கடைகளில் மல்லிகைப்பூ ஒரு முழம் 20 ரூபாய்க்கு விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

இன்றைய செய்திகளும் வேளாண் நடைமுறைகளும்!

இன்றைய வேளாண் செய்திகள்: காய்கறி பயிரிட ரூ. 8 ஆயிரம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)