இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 24 April, 2023 3:50 PM IST
Falling cotton prices! Worried farmers!!

புதுச்சேரி சாலையில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் செயல்பட்டு வருகின்றது. இங்கு விழுப்புரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள், தங்கள் விளைநிலங்களில் அறுவடை செய்கின்ற விளைபொருட்களை மூட்டைகளாகக் கட்டிக்கொண்டு சரக்கு வாகனம், டிராக்டர்கள் மூலமாக விற்பனைக்காகக் கொண்டு வந்தனர்.

இந்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு நெல், உளுந்து, மணிலா, தானிய பயிர்களுக்கு அடுத்ததாகப் பருத்தி வரத்து அதிகரித்து வருகின்றது. கடந்த சில வாரங்களாகவே இங்கு பருத்தி வரத்து அதிகரித்துக் காணப்படுகின்றது. ஒரு நாளைக்கு 600 மூட்டைகள் வரை பருத்தி வரத்து வருகின்றது. இவற்றை எடைபோட்டு வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு (100 கிலோ எடை கொண்டது) ரூ.8 ஆயிரம் முதல் ரூ.8,500 வரை வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்திருக்கின்றனர்.

இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஊழியர்கள் குறிப்பிடுகையில், “மற்ற ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களைக் காட்டிலும் இங்கு விலை அதிகம் வைக்கப்படுவதால் வெளிமாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் பலர், விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்குப் பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் பருத்தி வரத்து அதிகரித்து காணப்படுகிறது. தற்போது தினமும் 600 மூட்டைகள் முதல் 750 மூட்டைகள் வரை வரத்து உள்ளது. தொடர்ந்து, இனி வரக்கூடிய நாட்களிலும் பருத்தி வரத்து அதிகரித்து காணப்படும்” எங்கின்றனர்.

அதோடு, கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு பருத்தியின் விலை குறைவாக இருக்கின்றது. சென்ற ஆண்டு 10,000 க்கும் மேலே விலை போன பருத்தி இந்த ஆண்டு 8,000 திற்கு தான் விலை போகின்றது. அரசாங்கம் பருத்திக்கு ஒரு நிர்ணயம் விலை தீர்மானிக்க வேண்டும் என விவசாயிகள் வியாபாரிகள் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

விவசாயிகளுக்கு தனியான விற்பனை அடையாள அட்டை!

5 மாதங்களுக்கு அந்துப்பூச்சி தாக்கப்பட்ட PDS அரிசிதான் கிடைக்கும்!

English Summary: Falling cotton prices! Worried farmers!!
Published on: 24 April 2023, 03:32 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now