News

Tuesday, 12 July 2022 06:35 PM , by: R. Balakrishnan

Coconut pulse rate raised

தென்னை விவசாயத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளது. தேங்காய் மட்டுமல்லாமல் தேங்காய் பருப்பு போன்ற உப பொருட்களும் அதிக இலாபத்தை தருகின்றன. குறிப்பாக தேங்காய் பருப்புகளுக்கான தேவை அதிகமாக இருக்கிறது. தற்போது, தேங்காய் உற்பத்தி குறைவின் காரணமாக தேங்காய் பருப்பு விலை அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது.

 

தேங்காய் பருப்பு விலை (Coconut Price)

ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம் ஒவ்வொரு வாரமும் நடைபெறுகிறது. அதன்படி, இன்று மொத்தம் 1251 மூட்டைகள் விற்பனைக்காகக் கொண்டுவரப்பட்டன. இதில் முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 82 ரூபாய் 86 காசுக்கும், அதிகபட்ச விலையாக 86 ரூபாய் 80 காசுக்கும், சராசரி விலையாக 86 ரூபாய் 30 காசுக்கும் விற்பனையானது.

அதேபோல, இரண்டாம் தரம் குறைந்தபட்ச விலையாக 63 ரூபாய் 10 காசுக்கும், அதிகபட்ச விலையாக 78 ரூபாய் 65 காசுக்கும், சராசரி விலையாக 76 ரூபாய் 59 காசுக்கு ஏலம் போனது. மொத்தமாக 61,547 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு 50 லட்சத்து 36 ஆயிரத்து 383 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.

இந்த ஏலத்தில் நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, அரூர், ஊத்தங்கரை, திருப்பத்தூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டனர். தேங்காய் பருப்பு விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க

4 நாட்களில் விவசாயிகளுக்கு அடங்கல் சான்றிதழ்: அமைச்சர் அறிவிப்பு!

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்வு: மகிழ்ச்சியில் விவசாயிகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)