தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் கோடை மழையும் பொய்த்துவிட்டது. பெரும்பாலான பகுதிகளில் தீவன விளைச்சல் குறைந்துள்ளதால், கால்நடைகளுக்கு பசுந்தீவனம் கிடைக்காமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
கால்நடை வளர்ப்பு
தேனி மாவட்டம் போடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் பெரும்பாலானோர் வேளாண் தொழிலுடன் கால்நடை வளர்ப்பையும் கவனித்து வருகின்றனர். ஆடு, மாடு வளர்ப்பவர்கள் பால் உற்பத்தி, சாண கழிவுகள் விவசாயத்திற்கு உரமாக பயன்படுத்தி வருகின்றனர். கால்நடைகளுக்கு தோட்ட பகுதிகளில் கிடைக்கும் பச்சை தீவனங்கள், சோளம், மக்காச்சோள அறுவடைக்குப் பின் கிடைக்கும் உலர் தட்டைகள், வைக்கோல்கள் தீவனமாக அளித்து வருகின்றனர்.
மழை குறைவு - விளைச்சல் பாதிப்பு
தற்போது கோடைக்காலம் தொடங்கியதைத்த தொடர்ந்து பருவமழை குறைந்ததால் நிலத்தடி நீர்குறைந்து விளை நிலங்கள் தரிசாக கிடக்கிறது. பச்சை தீவனங்களுக்கும், புல் பூண்டுகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன. மானாவாரி நிலக்கடலை சரியான விளைச்சல் இல்லாமல் மகசூல் பெருமளவில் குறைந்துள்ளது. ஏனவே விவசாயிகள் நிலக்கடலைக்கு மாற்றாக தக்காளி, துவரை பயிரிடப்பட்டு வருகின்றனர்.
தீவனம் தட்டுப்பாடு
மாட்டுத்தீவனமாக பயன்படும் கடலை, சோளம், வைக்கோல் பயிர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சிறு விவசாயிகள் மாட்டுத்தீவனத்திற்காக நெடுந்துாரம் உள்ள மலை அடிவாரத்திற்கு சென்று பச்சை தீவனங்களை விலைக்கு வாங்கி கொண்டு வர சிரமம் அடைகின்றனர். உள்கிராமங்களில் விளைச்சல் பாதிக்கப்பட்டு தீவன தட்டுப்பாட்டால் கால்நடை வளர்ப்போர் சிரமம் அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க....
வெப்ப அயற்சியிலிருந்து கோழிகளைப் பாதுகாக்க தெளிப்பான்களை உபயோகிக்கலாம்! ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்!
ஏப்.8ல் கால்நடைத் தீவன மேலாண்மை பயிற்சி தொடக்கம்- தொண்டு நிறுவனம் ஏற்பாடு!