News

Thursday, 25 February 2021 07:45 AM , by: Daisy Rose Mary

வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் 40 லட்சம் டிராக்டர்களுடன் நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம் என விவசாயச் சங்கம் அறிவித்துள்ளது.

 

விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், டெல்லி, ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர மத்திய அரசு விவசாயிகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இதில் எந்த நல்ல முடிவு எட்டப்படவில்லை.

குடியரசு தினத்தில் வன்முறை

இதற்கிடையே குடியரசு தினத்தில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி திசைமாறி வன்முறையாக வெடித்தது. போராட்டக்காரர்கள் கூட்டத்தில் சில விஷமிகள் புகுந்ததால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். இதனால் குடியரசு தினத்தில் டெல்லி பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது, இதன் உச்சக்கட்டமாகச் சிலர் செங்கோட்டை வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். செங்கோட்டையில் சீக்கிய மத கொடியும் ஏற்றினர் . இதனால் சில விவசாய அமைப்புகள் தொடர் போராட்டத்திலிருந்து விலகின.

தங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல், ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வரும் விவசாய அமைப்புகள் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும்வரை வீட்டுக்குச் செல்வதில்லை என்பதில் உறுதியாக உள்ளனர். 

 

நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி

இந்நிலையில் மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால், அடுத்த கட்டமாக நாடாளுமன்றத்தை நோக்கி டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். ராஜஸ்தானில் நடைபெற்ற விவசாயிகள் பேரணியில் பேசிய பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகைத், நாடாளுமன்றத்தை நோக்கி நடத்தப்படும் பேரணியில், 40 லட்சம் டிராக்டர்கள் ஈடுபடுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பதில் 

விவசாயிகளின் அடுத்தகட்ட போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்திய அரசு விவசாயிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கிறது. வேளாண் சட்டங்களை மூன்றரை ஆண்டுகள் நிறுத்தி வைத்து, ஒரு கூட்டுக்குழு மூலம் இரு தரப்புக்கு இடையிலான பிரச்சினைகளைக் களைவது தொடர்பான எங்களது கோரிக்கைக்கு விவசாயிகள் செவிசாய்த்தால் அரசு பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்கும் என்றார்.

மேலும் படிக்க...

பிஎம் கிசான் திட்டம் 2 ஆண்டுகள் நிறைவு! - விவசாயிகளின் உறுதிக்கு பிரதமர் மோடி பாராட்டு!

விவசாயத்தில் கவனம் செலுத்தும் தமிழக அரசு! - இடைக்கால பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு ரூ.11,982 கோடி நிதி ஒதுக்கீடு!!

TNPSC Recruitment 2021 : வேளாண், தோட்டக்கலை அலுவலா்கள் பணியிடங்களுக்குத் தோ்வு: சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடு!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)