1. செய்திகள்

பிஎம் கிசான் திட்டம் 2 ஆண்டுகள் நிறைவு! - விவசாயிகளின் உறுதிக்கு பிரதமர் மோடி பாராட்டு!

Daisy Rose Mary
Daisy Rose Mary
PM Modi

Credit : The Logical Indian

விவசாயிகளின் கௌரவமான, வளமான வாழ்க்கையை உறுதி செய்யும் நோக்கத்தோடு தொடங்கப்பட்ட பிரதமரின் கிசான் திட்டம் (PM-Kishan Scheme) இன்று இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. நமது விவசாயிகளின் உறுதித் தன்மையும், ஆர்வமும் எழுச்சியூட்டுவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பிஎம் கிசான் திட்டம் 2 ஆண்டுகள் நிறைவு

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நமது நாட்டு மக்களுக்கு உணவு அளிப்பதற்காக இரவும், பகலும் கடுமையாக உழைக்கும் விவசாயிகளுக்கு கௌரவமான, வளமான வாழ்க்கை வழங்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் பிரதமரின் கிசான் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. நமது விவசாயிகளின் உறுதித் தன்மையும், ஆர்வமும் எழுச்சியூட்டுகிறது.

சீரிய திட்டங்கள்

வேளாண் துறையில் மாற்றம் ஏற்படுத்துவதற்காக கடந்த ஏழு ஆண்டுகளில் இந்திய அரசு ஏராளமான முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மேம்பட்ட பாசனம் முதல் அதிக தொழில்நுட்பம், அதிக கடன், சந்தைகள் முதல் முறையான பயிர் காப்பீடு, மண் வளத்தில் கவனம் செலுத்துவது முதல் இடைத்தரகர்களின் நீக்கம் வரை அனைத்து நடவடிக்கைகளும் உள்ளடங்கியுள்ளன.

நமோ செயலி

குறைந்தபட்ச ஆதரவு விலையில் வரலாற்று உயர்வை ஏற்படுத்தும் வாய்ப்பை நமது அரசு பெற்றது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். விவசாயிகளுக்காக மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்த ஓர் பார்வையை நமோ செயலியில் நீங்கள் காணலாம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

விவசாயத்தில் கவனம் செலுத்தும் தமிழக அரசு! - இடைக்கால பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு ரூ.11,982 கோடி நிதி ஒதுக்கீடு!!

TNPSC Recruitment 2021 : வேளாண், தோட்டக்கலை அலுவலா்கள் பணியிடங்களுக்குத் தோ்வு: சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடு!!

90% மானியத்தில் வெள்ளாடு, செம்மறி ஆடு பெற விண்ணப்பிக்கலாம் - விவரம் உள்ளே!!

தமிழக சட்டப்பேரவையில் நாளை இடைக்கால பட்ஜெட் - ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்!!

English Summary: PM-Kisan scheme completes two years, The tenacity and passion of our farmers is inspiring, says PM

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.