திருச்சி மாவட்டத்தில் தனியார் உரக்கடைகளில் யூரியா தட்டுப்பாடு நிலவுவதால் குறுவை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த 15 நாட்களாக வரத்து இல்லாததே தட்டுப்பாட்டுக்கு காரணம் எனத் தெரிவித்துள்ள நிலையில் மாநில அரசு இவ்விவகாரத்தில் தலையீட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. கர்நாடக அணையிலிருந்து போதிய நீரினை குறித்த நேரத்தில் திறக்காததால் ஏற்கெனவே வேதனையடைந்துள்ள விவசாயிகளுக்கு மாவட்டத்தில் நிலவும் யூரியா உரம் தட்டுப்பாடு பிரச்சினையால் மேலும் வருத்தமடைந்துள்ளனர்.
மாவட்ட வேளாண் இடுபொருள் வியாபாரிகள் சங்கத் தலைவர் சி.சின்னதுரை, முன்னணி நாளிதழ் ஒன்றிடம் கூறுகையில், யூரியா தட்டுப்பாடு தற்போது கடுமையாக உள்ளது. எங்களுடன் ஒப்பிடும் போது சங்கங்கள் எண்ணிக்கையிலும் மிகவும் குறைவாக உள்ளது. கிட்டத்தட்ட ஒவ்வொரு கிராமத்திலும் உரக்கடை உள்ளது, உரம் சப்ளை செய்யும் போது விவசாயிகளை நேரடியாக தொடர்பு கொள்ளவும்.பல பிராண்டட் நிறுவனங்கள் யூரியாவை இன்னும் எங்களுக்கு அனுப்பவில்லை. மாநில அரசு தலையிட்டு, எங்களுக்கு தேவையான சப்ளை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்" என்றார்.
லால்குடியை சேர்ந்த தனியார் உர வியாபாரி எல்.ஆரோக்கியசாமி கூறுகையில், "நிறுவனங்கள் தேவையான அளவு யூரியாவை வழங்குவதில்லை. கடந்த 15 நாட்களாக சப்ளை இல்லை. 50 ஆண்டுகளுக்கும் மேலாக இதுபோன்ற ஒரு சூழ்நிலையை நான் சந்திப்பது இதுவே முதல் முறை. மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் யூரியாவை இன்னும் பெறவில்லை” என்றார்.
கரும்பு, பருத்தி, வாழை, நெல் சாகுபடிக்கு யூரியா இன்றியமையாதது. தமிழ்நாடு அரசு குறுவை தொகுப்புத் திட்டத்தினை அறிவித்துள்ள நிலையில் தனியார் கடைகளிலும் விவசாயிகள் உரங்களை வாங்கி வருகின்றனர். மேட்டூர் அணையிலிருந்து இருந்து தண்ணீர் வரத்து குறைந்ததையடுத்து, ஏராளமான விவசாயிகள் ஆழ்துளை நீரை பாசனத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இதுபோன்ற விவசாயிகள், தனியார் உரக்கடைகளை அணுகும்போது, யூரியா தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது. பிரச்சினையின் தீவிர தன்மையினை உணர்ந்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மற்றொரு வியாபாரி ஒருவர் கூறுகையில், ''மற்ற உரங்களைப் போல், யூரியாவின் விலை நீண்ட நாட்களாக மாறாமல் உள்ளது. இதனால், யூரியாவுடன் மற்ற பொருட்களை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இது பெரும் சுமையாக மாறியுள்ளது.
டிஏபி, பொட்டாஷ் போன்றவற்றின் விலை கடந்த மூன்று ஆண்டுகளில் பன்மடங்கு அதிகரித்துள்ளது; ஆனால், யூரியாவின் விலை அப்படியே உள்ளது. மழை இல்லாததால், தனியார் கடைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டு வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் பிரச்சினையை ஆராய்வோம்” என்றார்.
மேலும் காண்க:
வெப்ப அலையில் பயிர்களை பாதுகாப்பது எப்படி? வேளாண் ஆலோசகரின் பதில்