1. விவசாய தகவல்கள்

தானியங்கி முறையில் துல்லியமான நீர்பாசனம்- மொபிடெக் வழங்கும் சேவைகள்

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Mobitech Wireless Solution provides digital farming solutions

மாறிவரும் காலநிலைகளுக்கு ஏற்ப விவசாய நடைமுறையில் புதிய உத்திகளை பயன்படுத்தி மகசூலை பெருக்க வேண்டிய கடமையும், பொறுப்புணர்வும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஸ்மார்ட் விவசாயத்திற்கு தேவையான அனைத்து சேவைகளையும் மொபிடெக் வயர்லெஸ் சொல்யூசன் நிறுவனம் வழங்கி வருகிறது.

"ஸ்மார்ட் ஃபார்மிங்" என்பது நடப்பு உலகில் ஒரு புதிய வேளாண் நடைமுறையாகும். இது ட்ரோன்கள், IoT (internet of things), ரோபோக்கள் மற்றும் AI போன்ற நவீன தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உற்பத்திக்குத் தேவையான மனித உழைப்பின் அளவைக் குறைப்பதோடு, தயாரிப்புகளின் தரத்தையும் அளவையும் மேம்படுத்தும் முறையாகும்.

Mobitech wireless solution நிறுவனம்:

தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம், பெருந்துறையினை தலைமையகமாக கொண்டு 2008 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது மொபிடெக் வயர்லெஸ் நிறுவனம். இந்த நிறுவனமானது டிஜிட்டல் விவசாய தீர்வுகள், பசுமை இல்லங்கள் மற்றும் நுண்ணிய மற்றும் சமூக நீர்ப்பாசனம் உள்ளிட்ட பல்வேறு வகையான சேவைகளை தென்னிந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு வழங்குகிறது.

கூடுதலாக, சென்சார் அடிப்படையிலான மற்றும் வானிலை சார்ந்த விவசாயம், IoT அடிப்படையிலான சேவைகளையும் வழங்குகிறது. பொள்ளாச்சி, தேனி, திருநெல்வேலி, பெங்களூர் மற்றும் மகாராஷ்டிராவில் இந்நிறுவனத்தின் கிளைகள் உள்ளன.

துல்லியமான நீர்பாசனம்:

துல்லியமான நீர்ப்பாசனம் என்பது ஒரு வகையான நிலையான விவசாய உத்தியாகும், இது தாவரத்திற்கு தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை சரியான நேரத்தில் மற்றும் சரியான இடத்தில், துல்லியமாக கணக்கிடப்பட்ட அளவுகளில் வழங்கும் முறையாகும்.

விவசாயிகள் வயலில் காலடி எடுத்து வைக்காமல், வயல் நிலைமைகளைக் கண்காணிக்கவும், முழுப் பண்ணை அல்லது ஒரு பயிர் தொடர்பான முக்கியமான முடிவுகளை எடுக்கவும் மொபிடெக் சேவைகளை வழங்குகிறது என அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT) என்பது அறிவார்ந்த விவசாயத்தின் உந்து சக்தியாகும். இது பண்ணைகளில் நிறுவப்பட்ட இயந்திரங்கள் மற்றும் சென்சார்களை இணைத்து விவசாய நடவடிக்கைகளை தானியங்கி முறைகளில் மாற்றியமைக்கிறது.

தண்ணீர் மற்றும் மின்சார சேமிப்பு:

மொபிடெக் நிறுவனம் வழங்கும் விவசாய நடைமுறைகளை பயன்படுத்தினால் 35% தண்ணீர் மற்றும் 15% மின்சாரத்தில் சேமிக்க இயலும் என நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கிறார்கள். விவசாயிகள் வறட்சி, உப்புத்தன்மை, ஆவியாதல், நிலத்தடி நீர் குறைதல் மற்றும் நீர் ஆதாரங்களை அணுகுவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

துல்லியமான நீர்பாசன முறையில் குறைந்த தண்ணீரைப் பயன்படுத்தும் போது அதிக மற்றும் சிறந்த மகசூல் கிடைக்கும். துல்லியமான நீர்ப்பாசனம் மின் பயன்பாட்டைக் குறைக்கும் அதே வேளையில் பண்ணை விளைபொருட்களின் பொருளாதார வருவாயை கணிசமாக உயர்த்தும் என நம்பிக்கைத் தெரிவிக்கிறார்கள்.

தானியங்கி முறையில் துல்லியமான நீர்பாசனத்தை மொபிடெக் நிறுவனம் மூலம் மேற்கொள்ள விரும்பும் விவசாயிகள், 99434 30000 என்ற எண்ணை தொடர்புக்கொண்டு விளக்கம் பெறலாம்.

மேலும் காண்க:

செம சான்ஸ்- 3359 காவலர் காலிப்பணியிடம்! TNUSRB அறிவிப்பு

கிருஷ்ணகிரியில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி நிறைவு- மா விவசாயிகள் கௌரவிப்பு

English Summary: Mobitech Wireless Solution provides digital farming solutions Published on: 08 August 2023, 12:15 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.