அதிதீவிர நிவர் புயல் தமிழகத்தை நாளை தாக்கவுள்ள நிலையில், பயிர் இழப்பை தவிர்க்க விவசாயிகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மேலும், பயிர் சேதத்திலிருந்து நிதிநிலையை சமாளிக்க பயிர் காப்பீடு செய்வதற்காக விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். டெல்டா மாவட்டங்களில் சம்பா நெற் பயிருக்கு ஆன்லைன் மூலம் பயிர்க் காப்பீடு செய்வதற்காக கணினி மையங்களில் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
வெளுத்துகட்டும் கனமழை
காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிதீவிர நிவர் புயல் தமிழகத்தில் நாளை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காத்திருக்கும் விவசாயிகள்
இதனால் பயிர்களை இழப்பை தவிர்க்க டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். பெரும்பாலான மாவட்டங்களில் சம்பா நெற்பயிரை காப்பீடு செய்ய நவம்பர் 30 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நிவர் புயல் காரணமாக அதிக எண்ணிக்கையிலானா விவசாயிகள் கணிணி மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து, டோக்கன் பெற்றுக் கொண்டும் காப்பீட்டிற்கான பிரிமிய தொகையை ஆன்லைனில் செலுத்தி வருகின்றனர்.
Nivar cyclone : அதிதீவிர புயலாக மாறிய "நிவர் புயல்" - தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை!!
பயிர் காப்பீடு - மாவட்ட வாரியக கடைசி தேதி
ஈரோடு, கரூர், பெரம்பலூர், ராமநாதபுரம், திருச்சி, திருவாரூர், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், சிவகங்கை, திருப்பூர், தருமபுரி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தேனி, தூத்துக்குடி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் சம்பா நெல் காப்பீடு செய்து கொள்ளலாம். இதற்கான இறுதிநாள் வரும் நவம்பர் 30ஆம் தேதி ஆகும்.
மேலும் தஞ்சாவூர், அரியலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, நாமக்கல், திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் சம்பா நெல் காப்பீடு செய்ய வரும் டிசம்பர் 15ஆம் தேதி இறுதி நாள் ஆகும்.
பயிர் காப்பீடு செய்ய தேவையான ஆவணங்கள்
-
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்
-
அடங்கல்/ சிட்டா
-
வங்கி கணக்கு புத்தகத்தில் முதல் பக்க நகல்
-
ஆதார் அட்டை நகல்
மேலும் படிக்க
Nivar cyclone : புயல் காற்றில் இருந்து தென்னை மரங்களை பாதுகாப்பது எப்படி?
புயல் எச்சரிக்கை : பயிர் இழப்பை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் - வேளாண் துறை!!
மழையில் நனைந்த உலர் தீவனங்களை கால்நடைகளுக்கு வழங்கக்கூடாது!