1. கால்நடை

மழையில் நனைந்த உலர் தீவனங்களை கால்நடைகளுக்கு வழங்கக்கூடாது!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Dry fodder soaked in rain should not be given to livestock- Veterinarian's advice!

Credit : IndiaMART

மழையில் நனைந்த உலர் தீவனங்களை (Livestock) எக்காரணம் கொண்டும், கால்நடைகளுக்குக் கொடுக்கக்கூடாது என கால்நடை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மழைக்காலத்தில் கால்நடைகளுக்கு நச்சுயிரிகள், நுண்ணுயிரிகள் மற்றும் ஒட்டுண்ணிகளால் பாதிப்பு ஏற்படும். தீவனத்தில் பூஞ்சான் தொற்று ஏற்படுவதால் செரிமானக் குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

குடற்புழுக்கலால் ரத்தசோகை ஏற்படலாம். கொட்டகை மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்கி நிற்ப்தால், கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி தொற்று ஏற்படக்கூடும்.

சினை மாடுகள், கன்றுக்குட்டிகள், ஆட்டுக்குட்டிகள் ஆகியவை மழை காலங்களில் அதிக பாதிப்படைய வாய்ப்பு உள்ளது.

இதனைத் தவிர்க்க பின்வருபவற்றைப் பின்பற்றுமாறு கால்நடை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

  •  மழையில் நனைய விடாமல் கொட்டகையில் கால்நடைகளைக் கட்டி வைக்க வேண்டியது அவசியம்.

  • கொட்டகையின் சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்காயமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

  • தொற்று நோய்கள் வராமல் தடுக்க தடுப்பூசி போட வேண்டும்.

  • குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.

  • நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக கால்நடை மருத்துவரை அணுக வேண்டும்.

  • காலை, மாலை வேளைகளில் மாட்டின் மடியை சுத்தமாகக் கழுவியப் பிறகே பால் கறக்க வேண்டும்.

  • வைக்கோல், சோளத்தட்டு, காய்ந்தக் கடலைக்கொடி போன்றவற்றை மழையில் நனையாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

  • மழையில் நனைந்த உவர் தீவனங்களைக் கட்டாயமாக கால்நடைகளுக்கு வழங்கக்கூடாது.

  • புண்ணாக்கு, சோளத்தட்டு வழங்கும் போது, நன்றாக காய்ந்திருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

  • மேலும் குச்சிக்கிழங்கு திப்பியை வழங்குவதால், மாடு விரைவில் உயிரிழக்க வாய்ப்புகள் உள்ளன.

மேலும் படிக்க..

80% அரசு மானியத்தில் அசத்தல் வியாபாரம்- முழு விபரம் உள்ளே!

ஆவின் நிறுவனத்தில் வேலை- ரூ.50,000 வரை ஊதியம்!

அழகுக்கும் கழுதைக்கும் ஆயிரம் சம்மந்தம் - தெரியுமா உங்களுக்கு!

English Summary: Dry fodder soaked in rain should not be given to livestock- Veterinarian's advice!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.